Share on Social Media


அமெரிக்கா, ஜப்பான் போன்ற உலக நாடுகள் இதுபோல் பயன்படுத்தப்பட்ட பல பழைய வாகனங்களை கடலுக்குள் போட்டு செயற்கையான பவளப்பாறைகளை மீன்வளப் பெருக்கத்துக்காக உருவாக்கும் முயற்சியில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ளன. இலங்கை அரசுத் தரப்பும் அதையே தங்கள் செயல்பாடுகளுக்கு உதாரணமாக முன்வைக்கிறது. ஆகவே, இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட உலக நாடுகளில் என்ன நிலை என்பதைப் பார்ப்போம்.

அமெரிக்காவில், மெக்சிகோ வளைகுடாவில் பழைய பேருந்துகளைப் போட்டு 1958-ம் ஆண்டு செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கினார்கள். 6 மைல் பரப்பளவுக்குள் மூன்று கட்டமைப்புகளை அமைத்தார்கள். ஆரம்பக்கட்ட சர்வேக்களில், அவை நல்ல பலன் தரக்கூடியதாகவும் பல்வேறு மீன் வகைகளை ஈர்க்கக்கூடியதாகவும் இருப்பது பதிவாகியுள்ளது. ஆனால், அது அமைக்கப்பட்ட பிறகு அந்தப் பகுதியில் ஏற்பட்ட கார்லா புயலுக்குப் (Hurricane Carla) பிறகு, நீரோட்டப் பாதையிலேயே அந்தச் செயற்கை பவளப்பாறைகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன என்று செயற்கை பவளப்பாறைகள் அமைக்க பயன்படுத்த வேண்டிய பொருள்களுக்கான கையேட்டில் (Guidelines for Marine artificial reef materials) குறிப்பிடப்பட்டுள்ளது.

Artificial reef construction

Artificial reef construction

14 அடி உயரம், 50 அடி நீளம், 10 அடி அகலம் மற்றும் 22,226 கிலோ எடை கொண்ட பெரிய வாகனத்தின் கூடுகளும் கூட, அமைக்கப்பட்ட முதல் 6 மாதங்களில் கவனித்தபோது நேர்மறை விளைவுகளைக் கொடுத்தாலும், 2 ஆண்டுகள் கழித்துப் பார்க்கையில் அவற்றின் கட்டமைப்பிலிருந்து பாகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேதமடையத் தொடங்கிவிட்டன. வடக்கு கரோலினாவிலிருந்து கொண்டுவரப்பட்டு, கடலில் இறக்கப்பட்ட இந்த கனரக வாகனக் கூடுகளில் 90 சதவிகிதம் பகுதிகள், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தபோது அமைக்கப்பட்ட இடத்தில் இல்லை.

1985-ம் ஆண்டுக்கான அமெரிக்க கடல்வளத்துக்கான தேசிய திட்டத்தில், “வாகனங்களின் பாகங்கள் கிடைப்பது எளிமையாக இருந்தாலும், அவை நீண்ட ஆயுள் கொண்டவையாகவோ, திடமானதாகவோ கடலுக்குள் இருப்பதில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அட்லான்டிக் கடற்கரையிலுள்ள செயற்கை பவளப்பாறை ஒருங்கிணைப்பாளர்கள், “பழைய வாகனங்கள், கடல் சூழலியலுக்கு உகந்ததல்ல, நிலையற்றது, அதிகபட்சம் ஒன்று முதல் மூன்று ஆண்டுகளுக்கே அவை தாக்குப்பிடிக்கும்” என்று இதுபற்றித் தெரிவித்துள்ளார்கள். சராசரியாக ஒரு செயற்கை பவளப்பாறை கட்டமைப்பின் ஆயுள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *