Share on Social Media


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜ அலங்காரத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது. அது, பழுவேட்டையர் வேடம் என்றும் தொல்காப்பியர் வேடம் என்றும் சமூக வலைதளங்களில் பலர் எழுதி வருகின்றனர். ஆனால், உண்மையில் அது இயக்குநர் வேலு பிரபாகரனின் இயக்கத்தில் வெளியாகவிருந்த ஒரு திரைப்படத்தின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு இயக்குநரின் காதல் டைரி, கடவுள் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு கடவுள் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதாக இருந்தார். அந்தத் திரைப்படத்தில் நரகாசுரன் கதாபாத்திரத்தில் சீமான் நடிப்பதற்காக போட்டோ ஷீட் செய்யப்பட்ட படங்கள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடவுள் படத்தின் முதல் பாகத்தில், மணிவண்ணன், ரோஜா, மன்சூர் அலிகான் ஆகியோரோடு வேலு பிரபாகரனும் நடித்திருந்தார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *