Share on Social Media

மனு பாக்கர் | Manu Bhaker

மனு பாக்கர் | Manu Bhaker
Alex Brandon | AP

“அதிக காலம் பயன்படுத்தியதே இதற்குக் காரணமாக இருக்க முடியும் என நான் கருதுகிறேன். இந்த லிவர் பிஸ்டலுக்கு உள்ளிருக்கும் பகுதி என்பதால் உள்ளே இருக்கும் கோளாற்றை வெளியிருந்து அடையாளம் காணமுடியாது. இப்படியான கோளாறு ஏற்பட ஆயிரத்தில் ஒரு வாய்ப்பே இருக்கிறது. 1999-லிருந்து நான் ஒரே துப்பாக்கியைத்தான் பயன்படுத்துகிறேன். ஆனால், இன்னும் அதன் லிவரில் எந்தப் பழுதும் இல்லை. ஆனால், மனு பாக்கரின் துப்பாக்கியிலிருக்கும் லிவர் நான்கு ஆண்டுகளில் உடைந்திருக்கிறது. உதிரியாக வைத்திருந்த மற்றொரு துப்பாக்கியில் இருந்த பாகங்களை மாற்றியே இறுதியில் அவர் ஆடினார்” என்றார் பயிற்சியாளர் ரானக் பண்டித்.

இதன் காரணமாகவே முதல் சுற்றில் 98 புள்ளிகள் பெற்ற அவர் அடுத்தடுத்த சுற்றுகளில் 95, 94, 95 புள்ளிகள் எடுத்துப் பின்தங்கினார். இருந்தும் ஐந்தாவது சுற்றில் 98 புள்ளிகள் எடுத்து வேற லெவல் கம்பேக் கொடுத்தார். தகுதிபெற இன்னும் வாய்ப்பிருந்த நிலையில் இறுதிச்சுற்று மனு பாக்கருக்குக் கைகொடுக்கவில்லை. கடைசி இரண்டு ஷாட்களிலும் 10 எடுத்தால் தகுதிபெற்றிருக்க முடியும் என்ற சூழலில் முதல் ஷாட்டில் 10 புள்ளிகள் பெற்ற அவர் அடுத்த ஷாட்டில் 8 புள்ளிகளே பெற்றார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *