Share on Social Media


பழநி:  கேரள பெண் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், பழநி போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரணையை துவக்கி உள்ளனர். கேரள மாநிலம், கண்ணூரைச் சேர்ந்த 45 வயதான பெண், அங்குள்ள தலச்சேரி காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் கடந்த 19ம் தேதி கணவருடன் பழநி வந்த தன்னை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பெண்ணின் கணவர், தமிழக டிஜிபிக்கு வாட்ஸ்அப்பில் புகார் செய்துள்ளார். இதன் அடிப்படையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏடிஎஸ்பி சந்திரன் தலைமையிலான போலீசார் பழநியில் விசாரணை நடத்தினர்.

சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் எஸ்பி ரவளிப்பிரியா பழநி காவல் நிலையத்தில் நேற்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: பழநி அடிவாரம் காவல் நிலையத்தில் கடத்தல் மற்றும் கூட்டு பலாத்காரம் என்ற 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. பெண் இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழு, இவ்வழக்கை விசாரிக்கும். இதற்காக எனது கண்காணிப்பின் கீழ் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு சிசிடிவி காட்சிகள், தொலைபேசி உரையாடல்கள் மற்றும் நேரடி சாட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தும்.

முதற்கட்ட விசாரணையில் பழநி வந்த தம்பதி, குடிபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் லாட்ஜில் இருந்து இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். லாட்ஜின் உரிமையாளருக்கு பணம் கேட்டு 3 மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. மேலும், பெண்ணை விட, அவரின் கணவருக்கு 10 வருடம் வயது குறைவாக உள்ளது. பழநி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வந்து, உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வழக்கு தொடர்பாக கேரள போலீசாருக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *