Share on Social Media


கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாட்டையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. கொரோனா பேரதிர்ச்சியைவிட, தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளை அதிக அதிர்ச்சியைக் கொடுக்கிறது. “தனியார் மருத்துவமனைகள் மனசாட்சிப்படி நடந்துகொள்ள வேண்டும்” என்று சுகாதாரத்துறை அமைச்சரே கூறினார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் தற்போது முதலிடத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் நிலைமை இன்னும் மோசமாகவே இருக்கிறது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாகத் தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையைத் தடுப்பதற்காக, சிறப்பு அதிகாரியே நியமிக்கப்பட்டார்.

ஒரு சில மருத்துவமனைகளுக்குக் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை, இந்தக் காலகட்டத்திலும் இருளர் பழங்குடிப் பெண் ஒருவருக்கு இலவசமாகப் பிரசவம் பார்த்துள்ளது மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பில்லூர் அணை அருகே உள்ள பரளிக்காடு பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி கூறுகையில், “என் மனைவி மீனா கர்ப்பமா இருந்தாங்க. வெள்ளியங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்துலதான் பார்த்துட்டு இருந்தோம். நல்லாதான் கவனிச்சாங்க. சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பிருக்குனு சொல்லிருந்தாங்க. ஆனா, ஏதாவது சிக்கல் வந்தா மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்புவோம்னு சொன்னாங்க.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *