கடலுார் : பழுதடைந்த பள்ளி கட்டடங்கள் இடிக்கப்படும் நிலையில், உடனடியாக புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கடலுார் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டம், மாவட்ட ஊராட்சி குழு கூட்டம், தலைவர் திருமாறன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ரிஸ்வானா பர்வீன், மாவட்ட திட்டக்குழு செயலர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.கவுன்சிலர் முத்துகிருஷ்ணன் பேசுகையில், மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் கலெக்டர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என, நேரடியாக சென்று கோரிக்கை வைத்தும்,
தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். இது குறித்து மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விசவாய நிலங்களை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என பேசினார்.தொடர்ந்து கவுன்சிலர் கந்தசாமி பேசுகையில், மாவட்ட கவுன்சிலர்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அதிகாரிகள் யாரும் மதிப்பதில்லை. கோரிக்கைகளுக்கு பதில் அளிப்பதில்லை. மாவட்டத்தில் பழுதான பள்ளி கட்டடங்களை இடிப்பது நல்ல விஷயம்.
அதே சமயத்தில், உடனடியாக நிதி ஒதுக்கி, புதிய கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.டாக்டர் தமிழரசி பேசுகையில், பள்ளி குழந்தைகளுக்கு பாதுகப்பு அளிக்கும் வகையில் கட்டடங்களை ஒழங்கு படுத்த வேண்டும். மேலும் ஒமைக்ரான் வைரஸ் பரவுகிறது. அதை ஈசியாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அனைவரும் மாஸ்க் அணியவேண்டும். கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என கூறினார்.
Advertisement