Share on Social Media


ஜம்மு,-முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியிலிருந்து இரண்டு முக்கிய தலைவர்கள் நேற்று விலகினர்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலமாக இருந்த போது, அங்கு பல ஆண்டுகள் தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடந்தது. கட்சியின் தலைவராக முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளார். சமீபகாலமாக கட்சியில் கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இக்கட்சியின் மூத்த தலைவர்களான தேவேந்தர் ராணா, சுர்ஜித் சிங் ஸ்லாத்தியா ஆகியோர் நேற்று அக்கட்சியில் இருந்து விலகினர். இருவரும் விரைவில் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.கட்சியின் மூத்த தலைவர்களின் ராஜினாமாவால் தேசிய மாநாட்டு கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி, தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *