Share on Social Media


காஞ்சிபுரம்-வடகிழக்கு பருவமழைக்கு முன், வேகவதி ஆற்று ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் வழங்க, பொதுப்பணி துறை தீவிரமாக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

காஞ்சிபுரம் நகரையொட்டி செல்லும் வேகவதி ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில், மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.கீழ்கதிர்பூர் கிராமத்திலிருந்து, காஞ்சிபும் நகரம் எல்லை முடியும் வரை 1,400க்கும் மேற்பட்ட வீடுகள், ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.இவர்களுக்காக, கீழ்கதிர்பூரில், 200 கோடியில், 2,112 வீடுகள் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளன. ஆனால், 1.5 லட்சம் ரூபாய் பங்களிப்பு நிதி செலுத்த வேண்டிய ஆக்கிரமிப்பாளர்கள், அவற்றை செலுத்த முடியவில்லை என்கின்றனர்.இதனால், அவர்களுக்கு வங்கி கடன் வழங்குவது தொடர்பான பணிகளில், மாவட்ட நிர்வாகம் தற்போது ஈடுபட்டு வருகிறது.இது குறித்து பொதுப்பணித்துறையினர் கூறியதாவது:புதிய வீட்டுக்காக 1.5 லட்சம் ரூபாயை செலுத்த முடியாதவர்களுக்கு, வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, குடிசை மாற்று வாரியம், பயனாளி, வங்கி என, மூன்று தரப்பையும் இணைத்து, முத்தரப்பு ஒப்பந்தம் போட முடிவு செய்யப்பட்டுள்ளது. விட்டு போன பயனாளிகள் பலருக்கு, ‘பயோமெட்ரிக்’ எடுக்கும் பணியும் நடக்கிறது.இது ஒருபுறம் இருக்க, வங்கி கடனுக்கு முன்னதாகவே, வீடுகளை அகற்ற, மாவட்ட நடவடிக்கை எடுக்கிறது. அதற்காக அனைத்து வீடுகளின் மின் இணைப்பையும் துண்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன் ஆக்கிரமிப்பாளர்கள், புதிய வீட்டில் குடியமர்த்தும் பணி விரைவில் துவங்கும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *