பரீனா குழந்தைக்கு பெயர் சூட்டு விழா!!
19 டிச, 2021 – 11:05 IST

சின்னத்திரை நடிகையான பரீனாவுக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த கையோடு பரீனா வெண்பா அவதாரம் எடுக்க வந்துவிட்டார். குழந்தையுடன் பரீனா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதற்கிடையில் பரீனாவின் குழந்தைக்கு பெயரிடும் விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பிக்பாஸ் புகழ் ஆரி அர்ஜூனன் கலந்து கொண்டு குழந்தையை வாழ்த்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், பரீனாவுடன் சின்னத்திரையில் இணைந்து நடித்து வரும் பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், குழந்தையின் பெயரை இதுவரை வெளியே சொல்லவில்லை.