Share on Social Media


மதுரை, : மதுரையில் அரசு போக்குவரத்து கழக தலைமை, கிளை அலுவலக ஓய்வறைகளில் போதிய வசதிகளின்றி கொசுத் தொல்லையால் நடத்துனர், ஓட்டுனர்கள் பரிதவிக்கின்றனர்.

இம்மண்டலத்தில் 1300 பஸ்களுக்கு 18 கிளைகளில் 6 ஆயிரம் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் உள்ளனர். நள்ளிரவு, அதிகாலை என பணி துவங்கி, முடிவதால் ஓட்டுனர்களுக்கு நிம்மதியான ஓய்வு அவசியம். இதற்காக இவர்களுக்கு தலைமை அலுவலகத்தில் 300 பேர், கிளைகளில் தலா 50- 100 பேர் ஓய்வு எடுக்கும் வகையில் ஓய்வறைகள் உள்ளன. இவை முறையாக பராமரிக்கப்படவில்லை. அடிப்படை வசதிகளில்லாததுடன், கொசுத் தொல்லையும் உள்ளது.

ஓட்டுனர், நடத்துனர்கள் கூறியதாவது: ஓய்வறைகளில் பெயருக்கு இயங்கும் மின்விசிறிகள் லொட… லொட… சப்தத்துடன் மெதுவாக சுழலுவதால் காற்று வருவதில்லை. பாய், தலையணைகள் முறையாக வினியோகிப்பதில்லை. துாய்மைப் பணியாளர்இல்லாததால் கழிப்பறை, குளியல் அறைகளில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லை. கொசுத்தொல்லையால் பணி முடிந்து நள்ளிரவில் அசந்து சென்றால் ஓய்வெடுக்க முடியவில்லை. கிளை மேலாளர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை, என்றனர்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *