Share on Social Media


ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் பற்றி வின்சென்ட் ராஜாவிடம் பேசினேன்.

“சின்னம்மா சசிகலாவுடன் பேசியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளேன். என்னை நீக்கும் அதிகாரம் எடப்பாடியாருக்கு கிடையாது. அதில் ஏகப்பட்ட சட்டமீறல் உள்ளது. அது ஒருபக்கம் இருந்தாலும் நான் கட்சி நலன் சார்ந்துதான் கருத்துகளைத் தெரிவித்தேன்.

வின்சென்ட் ராஜா

வின்சென்ட் ராஜா

இன்றுவரை நான் அதிமுகதான். நான் லாபம் சம்பாதிக்க நினைத்திருந்தால் வேறு கட்சியில் சேர்ந்திருக்கலாம். அதிமுகவில் நிர்வாகியாக இருந்து ஒரு ரூபாய்கூட சம்பாதித்ததில்லை. மாறாக நான் சம்பாதிக்கும் பணத்தைதான் செலவழித்துள்ளேன்.

அம்மா மறைவுக்குப் பிறகு அதிமுக அழிவுப்பாதைக்கு செல்ல எடப்பாடி, ஓ.பி,எஸ்தான் காரணம். அவர்களிடம் ஆளுமைத்திறன் இல்லை. வேலுமணியைத் தவிர மற்ற அமைச்சர்கள் எல்லோரும் அவரவர் தொகுதியில் மடும்தான் வேலை செய்தார்கள். மற்ற வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தைத் தலைமை கண்டுகொள்ளவே இல்லை. உதாரணத்துக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சி தோல்வியடைந்ததற்கு மாவட்ட செயலாளர் முனியசாமிதான் காரணம். அவர் தன் மனைவி போட்டியிட்ட முதுகளத்தூர் தொகுதியில் மட்டும்தான் பணியாற்றினார். அதே நேரம் அங்கு திமுக சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் மாவட்டத்தின் மற்ற தொகுதிகள் மட்டுமில்லாமல், மற்ற மாவட்டங்களிலும் பிரசாரம் செய்தார். இராமநாதபுரத்தில் போட்டியிட்ட திமுக மாவட்ட செயலாளர் மற்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்றினார். இப்படியுள்ள நிலையில் சுயநலமான மாவட்ட செயலாளர்கள், ஆளுமைத்திறன் இல்லாத தலைமையினால் கட்சி தோல்வி அடைந்தது. அதனால் சின்னம்மா போன்றவர் அதிமுகவில் தலைமையேற்க வேண்டுமென்று தெரிவித்தேன். அதனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், கார் எரிப்பு போன்ற அச்சுறுத்தலையும் சந்தித்துள்ளேன். காவல்துறைதான் இதற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்” என்றார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *