Share on Social Media

மும்பை: ‘‘இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்கும்படி டிராவிட்டுக்கு நெருக்கடி தரக் கூடாது,’’ என, வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளது. இதனையடுத்து இலங்கை சென்றுள்ள தவான் தலைமையிலான இந்திய அணிக்கு பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்.சி.ஏ.,) இயக்குனராக உள்ள டிராவிட், இந்தியா ‘ஏ’, 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிகளுக்கு ஆலோசகராக உள்ளார்.

எமிரேட்சில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருடன் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் நிறைவடைகிறது. அதன்பின் டிராவிட், இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் வாசிம் ஜாபர் கூறியது: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட டிராவிட்டுக்கு நெருக்கடி கொடுக்க கூடாது. ஏனெனில் இவர், இந்தியா ‘ஏ’, 19 வயதுக்குட்பட்ட அணிகளுடன் இணைந்து செயல்படும் பட்சத்தில் சிறந்த வீரர்களை உருவாக்கலாம். இவரது உதவி, இளம் வீரர்களுக்கு தேவைப்படுகிறது. வரும் காலத்தில் சீனியர் அணிக்கு திறமையான நிறைய வீரரர்களை தரலாம். இதற்கான தகுதி இவரிடம் உண்டு. இம்முறை இலங்கை தொடரில் இவரது பயிற்சியின் கீழ் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவர்.

இவ்வாறு ஜாபர் கூறினார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *