Share on Social Media


இப்படி ‘பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் குற்றச்சாட்டு விவகாரம்’ ஜாதி, மதம், இனம், அரசியல் என பல்வேறு தளங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்துதி வருவதைக் கண்டு கொதிக்கும் நடுநிலையாளர்கள் ‘நடைபெற்றிருப்பது மன்னிக்கமுடியாத மாபெரும் குற்றம். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டம் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். மாறாக, இந்த குற்றப் பின்னணியில் ஜாதி, மத சர்ச்சைகளை முன்னிறுத்தி அரசியல் செய்வது தவறானது’ என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

அண்மையில் இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ள பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகை குஷ்பூ, ‘குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கடுமையான குற்றம். அதேசமயம், இதில் அரசியலையோ, சாதியையோ கொண்டுவரக்கூடாது’ எனச் சாடியுள்ளார்.

இதேபோல், ‘இந்தப் பாலியல் குற்றச்சாட்டு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என தன்னிலை விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ள மதுவந்தியும்கூட, ‘இந்தப் பிரச்னையில் ஜாதி, மதம், இனம், ப்ராமின், நான் ப்ராமின், ஷத்ரியா, வைஷியா, சூத்ரா, இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன், ஜெயின், சீக்கியம் என தப்பான அரசியலை விளையாடாதீர்கள்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், இதற்குப் பதிலடியாக, கடந்தகால சமூகப் பிரச்னைகளின்போது, மதுவந்தி கருத்து தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய வீடியோப் பதிவுகளையே வெட்டி, ஒட்டி ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இந்த நிலையில், ‘தவறு செய்த ஆசிரியர் மற்றும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தராத பள்ளி நிர்வாகம் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்ற கருத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ட்வீட் வெளியிட… விவகாரம் அரசியல் ரீதியாகவும் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *