Share on Social Media

டோக்கியோ: உலக விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி நாளை ஆரம்பமாகிறது. கொரோனா பாதிப்பு, ஒரு ஆண்டு தாமதம், ஸ்பான்சர் விலகல் என பல தடைகளை தாண்டி போட்டிகள் களைகட்ட உள்ளன. தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற ஒரே இலக்குடன் களமிறங்கும் இந்திய நட்சத்திரங்கள் சாதிக்க காத்திருக்கின்றனர். அடுத்த 15 நாட்களுக்கு 36 வகையான போட்டிகளை ரசிகர்கள் கண்டு மகிழலாம்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி(ஜூலை 23–ஆக. 8) நடக்க உள்ளது. 206 நாடுகளை சேர்ந்த 11,238 க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் முதன் முறையாக அதிகபட்சமாக 127 நட்சத்திரங்கள்(67 வீரர், 52 வீராங்கனைகள்) 18 வகையான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் சேர்த்து மொத்தம் 228 பேர் கொண்ட இந்திய குழு செல்கிறது.

எதிர்பார்ப்பில் ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் 8 தங்கம் வென்ற அணி இந்தியா. தவிர ஒரு வெள்ளி (1960), 2 வெண்கலம் (1968, 1972) கைப்பற்றியது. 1980க்குப் பின் ஒரு பதக்கமும் கிடைக்கவில்லை. தற்போது ‘நம்பர்–4’ அணியாக உள்ள இந்தியா எப்படியும் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக களமிறங்குகிறது. 

சிந்து நம்பிக்கை

ரியோ ஒலிம்பிக் (2016) பாட்மின்டனில் வெள்ளி வென்றவர் சிந்து. இம்முறை ‘தங்க மங்கையாக’ மாறுவார் என நம்பலாம். உலக குத்துச்சண்டையில் ஆறு தங்கம் வென்ற மேரி கோம், சிம்ரஞ்சித், லவ்லினா, பூஜா பதக்கத்துடன் திரும்பலாம். ஆண்கள் பிரிவில் அமித் பங்கல், விகாஷ் கிருஷ்ணன் சாதிக்கலாம்.

‘ஜூனியர்’ சவுரப் 

துப்பாக்கிசுடுதலில் இம்முறை மனு பாகர், ராகி சர்னோபட், இளவேனில் உட்பட 8 வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

‘ஹாட்ரிக்’ தீபிகா

சமீபத்திய உலக கோப்பை வில்வித்தையில் ஒரே நாளில் ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்றவர் தீபிகா குமாரி. இவர், நெருக்கடியை தாண்டி சாதிக்க வேண்டும். ரியோ ஒலிம்பிக் மல்யுத்தம் காலிறுதியில் முழங்கால் காயத்தால் வெளியேறினார் வினேஷ் போகத். தற்போது எழுச்சி பெற்றுள்ள இவர், பதக்கம் வெல்ல முயற்சிக்கலாம்.

ரசிகர்களுக்கு ‘நோ’

கொரோனா காரணமாக ஒலிம்பிக்கை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.

தமிழக நட்சத்திரங்கள் 

ஒலிம்பிக்கில் முதன் முறையாக தமிழகத்தில் இருந்து அதிகபட்சம் 13 பேர் பங்கேற்கின்றனர். 4*400 மீ., ஆண்கள் தொடர் ஓட்டத்தில் ஆரோக்கிய ராஜிவ், நாகநாதன், பெண்கள் தொடர் ஓட்டத்தில் ரேவதி, தனலட்சுமி, சுபா என தடகளத்தில் 5, நேத்ரா, விஷ்ணு, கணபதி, வருண் (பாய்மர படகு) என படகு போட்டியில் 4, அஜந்தா சரத் கமல், சத்யன் என டேபிள் டென்னிசில் 2 தவிர இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக  வாள் சண்டையில் களமிறங்கும் பவானி தேவி, இளவேனில் (துப்பாக்கிசுடுதல்) என 13 பேர் சாதிக்க காத்திருக்கின்றனர்.

 

ரூ. 1,14,764 கோடி

கடந்த 2013 ல் ஜப்பான் ஒலிம்பிக் நடத்த உரிமம் பெற்ற போது ரூ. 55,931 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டது. கடந்த ஆண்டு ரூ. 93,964 கோடியாக அதிகரித்தது. ஒரு ஆண்டு தள்ளிப் போனதால் கூடுதலாக ரூ. 20,800 கோடி சேர்த்து, தற்போது மொத்தம் ரூ. 1,14,764 கோடி செலவில் போட்டி நடக்கிறது.

 

ஒலிம்பிக் கிராமம்

டோக்கியோ வளைகுடாவில் 44 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது ஒலிம்பிக் கிராமம்.

* 21 அபார்ட்மென்ட் கட்டப்பட்டுள்ளன.

*‘டைனிங் ஹாலில்’ ஒரே நேரத்தில் 3000 பேர் அமர்ந்து சாப்பிடலாம். ஜிம், பார்க் வசதிகளும் உள்ளன.

* ஒலிம்பிக் கிராமத்தில் தங்கும் நட்சத்திரங்கள் போட்டி முடிந்த 48 மணி நேரத்தில் கிளம்பி விட வேண்டும்.

*  மொத்தம் 18,000 பேர் தங்கலாம்.

* தினமும் 20,000 கொரோனா சோதனை நடக்கவுள்ளன.

* போட்டி முடிந்த பின் அனைத்து அறைகளும் விற்கப்படும். கடந்த ஆண்டு ஒவ்வொன்றும் ரூ. 11.2 லட்சம் என 900 அறைகள் விற்று விட்டன.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *