Share on Social Media

புதுடில்லி: இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பூஜா ராணி 30. ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சமீபத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கிலும் சாதிக்கும் திட்டத்தில் உள்ளார். இவர் கூறியது:

டோக்கியோ ஒலிம்பிக்கில் முடிந்தவரை போராடுவது என முடிவு செய்துள்ளேன். மற்றவை எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார். என்னைப் பொறுத்தவரையில் ஒலிம்பிக் பதக்க மேடையில் என்னை நானே பார்க்க விரும்புகிறேன். ஒலிம்பிக் போட்டிக்காக ஐரோப்பியர்களுக்கு எதிராக பயிற்சியில் ஈடுபடுவது கைகொடுக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு பூஜா ராணி கூறினார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *