Share on Social Media


தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு, முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் தொடர்ச்சியாக ரெய்டு நடத்தப்படுகிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில், முன்னாள் சமூகநலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜாவுக்கு எதிராக அவரின் உறவினரான குணசீலன் என்பவர், ராசிபுரம் காவல் நிலையில், கடந்த ஆகஸ்ட், 28 -ம் தேதி ஒரு அதிரடி புகாரை தெரிவித்திருந்தார்.

சத்துணவு அமைப்பில் வேலை வாங்கி தருவதாக கூறி, 15 நபர்களிடம் ரூ. 76,50,000 வசூலித்து தரச்சொல்லி பெற்றுக்கொண்டதோடு, அவர்களுக்கு வேலையும் வாங்கிதராமல், பணத்தையும் திருப்பி தராமல் சரோஜா ஏமாற்றிவிட்டதாக, புகார் தெரிவித்திருந்தார். அதன்பிறகு, அந்த புகார் சைலன்ட் மோடில் இருந்தது. குணசீலனும் அதுகுறித்து பேசாமல் அமைதி காத்தார். இந்த நிலையில், குணசீலனின் புகார் அடிப்படையில், சரோஜா மீது 406, 420, 506/1 ஆகிய மூன்று பிவுகளின் கீழ், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், கடந்த மாதம் 26 -ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் சரோஜா தரப்பில் நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் கடந்த 29 -ம் தேதி தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *