Nortje Tamil News Spot
Share on Social Media

2020-க்கான ஐபிஎல் ஏலத்தில் நார்க்கியாவை எந்த அணியும் எடுக்கவில்லை. இந்நிலையில்தான் கொரோனா காரணமாக டெல்லி அணியில் இருந்து கடைசி நேரத்தில் இங்கிலாந்து பெளலர் கிறிஸ் வோக்ஸ் விலக, அவருக்குப் பதில் நார்க்கியாவை டெல்லி அணிக்குள் எடுத்தார் ரிக்கி பான்ட்டிங். “எப்படி தூக்கினேன் பாத்தல்ல?” என ரிக்கி பான்ட்டிங்கை இப்போது கெத்தாக துபாயில் சுற்றவைத்துக்கொண்டிருக்கிறார் நார்க்கியா.

முதல் ஐபிஎல் தொடரிலேயே செயல்புயலாக மாறியிருக்கும் நார்க்கியாவுக்கு, பஞ்சாபுக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் விக்கெட்டே கிடைக்கவில்லை. ஆனால், சிஎஸ்கே-வுக்கு எதிரான அடுத்தப்போட்டியில் முரளி விஜய், கேதர் ஜாதவ் என முக்கிய(!!!) பேட்ஸ்மேன்களை டக் அவுட்டுக்கு அனுப்பிவைத்தார் நார்க்கியா.

கொல்கத்தாவுக்கு எதிரானப் போட்டியில் நரைனின் ஸ்டம்புகளைத் தகர்த்த நார்க்கியா, மார்கன் மற்றும் கம்மின்ஸ் விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.

ஆன்ரிச் நோர்க்கியாவுக்கு தன் சொந்த நாட்டு பெளலர் டேல் ஸ்டெய்ன்தான் ரோல் மாடல். ஆனால், இப்போது குருவை மிஞ்சிய சிஷ்யனாய் ஸ்டெய்னையே வேகத்தில் ஆச்சர்யப்படுத்துகிறார் நார்க்கியா.

நார்க்கியா, இன்னும் பல ஆச்சர்யங்களை நிகழ்த்துவார்… காத்திருப்போம்!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *