Share on Social Media


‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’, ‘கண்ணாடி’, ‘சூர்ப்பனகை’, ‘தி சேஸ்’ ஆகிய படங்களின் இயக்குநர் கார்த்திக் ராஜூ. ‘தசாவதாரம்’ படத்தில் கிராஃபிக்ஸில் பணியாற்றிய அனுபவம் குறித்து அவரிடம் பேசினேன்.

” ‘படையப்பா’, ‘பம்மல் கே.சம்பந்தம்’, ‘தசாவதாரம்’, ‘மருதநாயகம்’ ட்ரெய்லர், ‘மாற்றான்’, ‘சிவாஜி’னு பல படங்களுக்கு விஷுவல் சூப்பர்வைசரா இருந்திருக்கேன். ‘தசாவதாரம்’ முடிஞ்சு இப்ப 13 வருஷம் ஆனாலும் அதோட நினைவுகள் இன்னும் பசுமையா மனசுக்குள் இருக்கு. ஒவ்வொரு போர்ஷனும் ரவிக்குமார் சார்கிட்ட காட்டி பிறகு கமல் சார்கிட்டேயும் அப்ரூவல் போகும். ‘கல்லை மட்டும் கண்டால்’ பாட்டு மட்டும்தான் கொஞ்சம் பாதுக்காப்பான போர்ஷன். ஒரே ரோல்ல ஆரம்பிச்சு அதே ரோல்லயே முடிஞ்சிடும்.

தசாவதாரம்

அடுத்து ஆரம்பிச்ச போர்ஷன் எல்லாமே ஹெவி ஒர்க் எடுத்துச்சு. அப்ப நான் சத்யம் கம்ப்யூட்டர்ஸ்ல விஷுவல் சூப்பர்வைசரா இருந்தேன். அந்த ஸ்டூடியோவுல மொத்தம் 300 பேர் இருந்தாங்க. மொத்தம் பத்து சூப்பர்வைசர்ஸ். எங்க ஹெட் அழகர் சாமி.

‘தசாவதாரம்’ படத்துக்காக நாலு சூப்பர்வைசர்கள் போனோம். ‘கல்லை மட்டும் கண்டால்’ பாடல்ல கடலுக்குள்ள இருந்து கேமரா நேரா மேல எழுந்து போகணும்னு முதல் ஒர்க் தொடங்குச்சு. அதன்பிறகு கோயில், கோயில் கோபுரம், கூட்டம்னு ஒர்க் போச்சு. அதுவரை கமல் சாரை நாங்க யாருமே பார்க்கல. பாடலோட சின்ன ஒர்க்கை கம்போஸ் பண்ணிட்டு அப்புறம் கமல் சார்கிட்ட காட்டினோம்.

4 Tamil News Spot
தசாவதாரம்

கடலுக்குள்ல கமல் சார் வாய்ல இருந்து பபிள்ஸ் வர்ற மாதிரி, ஒரு திமிங்கலம் வாயில இருந்து ரத்தம் வழியற மாதிரினு நிறைய விஷயங்கள் பண்ணோம். அப்புறம் பிச்சாரவரம்ல அந்த பாடலோட கன்டின்யுட்டில அசின் வர்ற போர்ஷன்ஸ் பண்ணோம். தரையில் படகு இருந்துச்சு. அது தண்ணீருக்குள்ள நகரணும். அப்படி போகும் போது அலைகள் எழணும். இந்த வொர்க் பெரிய சவாலா இருந்துச்சு.

சில சீக்குவென்ஸ்கள் எடுத்த உடனேயே ஒகே ஆச்சு. கரெக்‌ஷன்ஸ் வராதது சந்தோஷமா இருந்துச்சு. கமல் சார் கெட்டப்பல ‘முகுந்தா முகுந்தா’வுக்கு பாட்டி கேரக்டர், ஜார்ஜ் புஷ் கேரக்டருக்கு கொஞ்சம் ஒர்க் பண்ணோம். அப்புறம் ஃப்ளெட்சர் கமல், பாட்டி கமல் கூட இன்டராக்‌ட் பண்ற காட்சி சவாலா இருந்துச்சு. ஷூட் எடுக்கும்போது ப்ராப்பர் மார்க்கிங் பண்ணித்தான் எடுத்தோம். ஒவ்வொரு கெட்டப்புக்கும் மேக்கப் குறைஞ்சது நாலு மணிநேரமாவது பிடிக்கும். அதனால, ஒரு கெட்டப்ல இருக்கும்போதே, அது தொடர்பான சீன்களை எடுத்துடுவாங்க.

3 Tamil News Spot
தசாவதாரம்

காலையில ஆறு மணிஷாட்டுக்கு அதிகாலை ரெண்டரை மணிக்கே வந்து மேக்கப் போட்டுட்டு இருப்பார் கமல் சார். நாங்க ஸ்பாட்டுக்குப் போய் கமல் சாரோட நடிக்கிறவங்க நிக்குற இடத்தை மார்க் பண்ற வேலை இருக்கும். ரெண்டு கமல் சந்திக்கற ஷாட் இருந்தா அது பெரிய சவால். ஸ்பாட்ல மட்டும் இல்ல கிராஃபிக்ஸ் ஸ்டூடியோக்கள்லயும் அதே சவால் இருந்துச்சு.

2 Tamil News Spot
தசாவதாரம்

ஏன்னா, ஒரு கெட்டப்புக்கும் அடுத்த கெட்டப்புக்கும் இடையே குறைஞ்சது ரெண்டு வாரம் இடைவெளி இருக்கும். சில சீன்கள்ல மூணு கமல் இருப்பாங்க. மூணு கெட்டப்புமே வெவ்வேற டைம்ல ஷூட் செஞ்சிருப்பாங்க. அதை எல்லாம் கரெக்‌டா மேட்ச் பண்ணலைனா, ரீஷூட் செய்ய வேண்டியிருக்கும். கமல் சார் இன்னொரு கமலை பார்த்து பேசும் போது, அவங்க கண்கள் மேட்ச் ஆகணும். இல்லைனா சிரமமாகிடும். கிரீன்மேட், லைவ்னு எல்லாம் மிக்ஸ் செஞ்சு எடுத்ததால, ரொம்ப கவனம் எடுத்துதான் கிராஃபிக்ஸ்ல செதுக்கினோம்.

Also Read: `ஜகமே தந்திரம்’: ஈழ அரசியல்தான் புரியாது… கார்த்திக் சுப்புராஜுக்கு கேங்ஸ்டர் கதையுமா தெரியாது?!

‘படையப்பா’வுல ‘கிக்கு ஏறுதே” பாடல்ல ரஜினி சார் டை கட்டியிருப்பார். அந்த பாடல் முடியும் போது ரஜினி சார் சாய்வார். அப்ப அவருக்கு ரோப் கட்டியிருந்தாங்க. அவர் சாயும் போது, அவரது கழுத்து டை அந்த ரோப்ல சுத்திக்கிச்சு. அதனால அந்த சாங்ல ரோப்பை நீக்கும் போது, அந்த டையையும் சேர்த்து நீக்கிட்டோம். அந்த பாடலை இப்ப நீங்க பார்த்தாகூட கவனிக்கலாம். அவர் கீழே படுத்திருக்கும்போது கழுத்துல டை இருக்கும். ஆனா, எழுந்திரிக்கும் போது டை இருக்காது. ஃபிரேம்ல எல்லாருமே ரஜினி சார் முகத்தை தான் கவனிப்பாங்க. அதனால இதை யாரும் அப்போ கண்டுக்கல.

b2bc8f56 71b1 452d 80af df9bb3f37db2 Tamil News Spot
மன்சூர் அலிகான் – கார்த்திக் ராஜூ – வெண்ணிலா கிஷோர்

அப்படித்தான் ‘தசாவதாரம்’ல ரெண்டு கமல் சார் வரும் சீன்கள்ல சைட்ல வரும் பிராப்பர்டீஸ்களை கண்டுக்காமல் விட்டிருப்போம். கமல் சார் டெக்னாலஜில பயங்கர ஸ்ட்ராங். சின்ன விஷயம்னாலும் கரெக்ட்டா கண்டுபிடிச்சு, ‘இந்த இடத்துல ஏதோ இடிக்குதே’னு யாரையும் ஹர்ட் பண்ணாமல் தவறை சுட்டிக்காட்டிடுவார். ஓங்கி அறைஞ்சு சுட்டிக்காட்ட வேண்டிய தவறைக்கூட, அவர் ரொம்ப ஜென்ட்டிலா சொல்லி புரியவைப்பார். அவரோட ‘தசாவதாரம்’ படத்துல வேலை செஞ்சதுல ரொம்ப சந்தோஷம்” என்று நிறைவாகப் பேசினார் கார்த்திக் ராஜூ.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *