படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய ரெஜினா
15 டிச, 2021 – 12:13 IST

கண்ட நாள் முதல் படம் மூலம் அறிமுகமான ரெஜினா கசான்ட்ரா தொடர்ந்து தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இந்த ஆண்டு வெளியான ‘சக்ரா’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, தெலுங்கில் உருவாகும் புதிய படத்துக்காக ரெஜினா தயாராகி வருகிறார். தற்போது கார்த்திக் ராஜூ இயக்கத்தில் ‘சூர்ப்பனகை’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதுதவிர பல படங்களை கைவசம் வைத்துக்கொண்டு நடித்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பத்திரிக்கையான போர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டை படத்தில் நயன்தாரா இடம் பெற்றிருந்தார். இதைத் தொடர்ந்து அந்த பத்திரிக்கையின் அட்டை படத்தில் நடிகை ரெஜினா கசான்ட்ரா புகைப்படமும் இடம்பெற்றது. தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் ரெஜினா தனது பிறந்தநாளை கொண்டாடினார். ‘பிரேக்கிங் நியூஸ்’ படப்பிடிப்பில் இருக்கும் ரெஜினா, படக்குழுவினர் இணைந்து பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக் வெட்டி கொண்டாடிய அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.