Share on Social Media


ஜலந்தர்-”பஞ்சாப் காங்.,கில் நடக்கும் மோசமான மோதலைப் போல, என் 40 ஆண்டு கால அரசியலில் இதுவரை பார்த்தது இல்லை,” என, காங்., மூத்த தலைவர் மணிஷ் திவாரி கூறியுள்ளார்.

பஞ்சாபில், ஐந்து மாதங்களுக்கு மேலாக காங்.,கில் நடந்து வந்த உட்கட்சி பூசல், அம்மாநில முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் இறங்கியதும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மோதல் இன்னும் நீடிக்கிறது. பஞ்சாப் காங்., மேலிட பொறுப்பாளராக இருந்த ஹரிஷ் ராவத்தும், மாநில காங்., தலைவர் நவ்ஜோத் சிங்கும் ஒருவரை ஒருவர் தாக்கி தினசரி பேட்டி அளித்து வருகின்றனர். இது குறித்து காங்., மூத்த தலைவர் மணிஷ் திவாரி கூறியிருப்பதாவது:பஞ்சாப் காங்.,கில் நடக்கும் மோசமான மோதலைப் போல, என் 40 ஆண்டு கால அரசியலில் இதுவரை பார்த்தது இல்லை.

காங்., தலைவர்கள் ஒருவரை ஒருவர் இழித்துப் பேசுவதைப் போல வேறு யாரும் பேச மாட்டார்கள். எல்லையோர மாநிலமான பஞ்சாபில் ஸ்திரமான ஆட்சியை அமரீந்தர் சிங் அளித்து வந்தார். அவரை பாராட்டாமல் கழற்றி விட்டதுடன், மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறையின்றி காங்., தலைவர்கள் மோதிக் கொண்டிருக்கின்றனர்.இதனால் மக்கள் எரிச்சலடைய மாட்டார்கள் என, காங்., கருதுகிறதா என தெரியவில்லை. ஆனால் இந்த மோதல் எந்தவகையிலும் கட்சிக்கு பயனளிக்காது.இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, மீனவ பெண்கள் குறித்து மணிஷ் திவாரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *