சண்டிகர்: விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள பஞ்சாபில், பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, முதல்வர் பதவியில் இருந்து விலகிய அமரீந்தர் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கி உள்ளார். மத்தியில் ஆளும் பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க திட்டமிட்ட அவர், அக்கட்சி தலைவர்களை சந்தித்து பேசியிருந்தார்.
இந்நிலையில், பா.ஜ.,வின் பஞ்சாப் மாநில பொறுப்பாளரான கஜேந்திர சிங் ஷெகாவத்தை அமரீந்தர் சிங் இன்று(டிச.,17) சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் கூறுகையில், பா.ஜ., உடனான கூட்டணி உறுதியாகியுள்ளது. தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடக்கிறது. யார் எங்கு போட்டியிடுவார் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். வெற்றி வாய்ப்பு அடிப்படையில் தொகுதி பங்கீடு இருக்கும். தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என 101 சதவீதம் நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், 7 கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், பா.ஜ.,- பஞ்சாப் லோக் காங்கிரஸ் இணைந்து போட்டியிடும் என்பதை அதிகாரப்பூர்வமாக கூறுகிறேன். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement