Share on Social Media


சண்டிகர்: ‛பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்ற கனவை செயல்படுத்த எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக’, புதிய தலைவராக நியமிக்கப்பட்ட நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்தது. முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வந்தார். வெளிப்படையாகவே முதல்வர் அமரிந்தர்சிங்கை கடுமையாக விமர்சித்து வந்தார். பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் கட்சியை மேலும் பலவீனமாக்கியது. இந்த உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் காங்கிரஸ் புதிய தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து சித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்ற கனவை செயல்படுத்த எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வாய்ப்பளித்த கட்சித் தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை தந்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது செயல் திறனை நிரூபிப்பேன். பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் அமருவதற்கு ஏற்ப அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனக்கூறி கட்சித் தலைமை 18 அம்சங்கள் அடங்கிய திட்டமிடலை வழங்கியுள்ளது. அதன்படி செயல்படுவேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *