Share on Social Media


கவுகாத்தி:அசாம் சட்டசபையில், பசு பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற, மாநில பா.ஜ., அரசு திட்டமிட்டுள்ளது.

அசாமில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. முதல்வராக, ஹிமந்த பிஸ்வ சர்மா பதவியேற்றார்.புதிய அரசு பதவியேற்ற பின், அசாம் சட்டசபையின் முதல் கூட்டம் நடந்தது.

இதில், கவர்னர் ஜகதீஷ் முகி பேசியதாவது:பசுக்கள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதையும், கடத்தப்படுவதையும் தடுக்க, சட்டசபையில் பசு பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற, அரசு திட்டமிட்டுள்ளது. ஏனெனில், பசுக்களை தெய்வமாக வழிபடுவது நம் நாட்டின் கலாசாரம்.

பசுவை புனிதமான விலங்காக மக்கள் கருதுகின்றனர். பசு பாதுகாப்பு சட்டம் அமலான பின், அசாமில் பசுக்களை கடத்துவோர், வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *