Share on Social Media


இந்நிலையில், கிரிஜா வைத்தியநாதனுக்கு உரிய அனுபவம் இல்லாத காரணத்தால் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தராரஜனிடம் பேசும்போது, “தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின் பிரிவு 5-ன் படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்படக்கூடிய நபருக்கு 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும்.

பொறியாளர் சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

பொறியாளர் சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் அனுபவம் ஐந்து ஆண்டுகளுக்கு இல்லை. குறிப்பாக 3 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே அவர் சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். எனவே, இவரது நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது. அதனால், கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். அதற்காக வழக்கு தொடர்ந்திருக்கிறோம். அது விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது” என்றார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *