Share on Social Media


பக்கத்து மாநிலங்களை போன்று சலுகை வேண்டும்: அரசுக்கு டி.ரஜேந்தர் சங்கம் கோரிக்கை

22 டிச, 2020 – 19:48 IST

எழுத்தின் அளவு:


TRajendar-request-to-TN-Govt

கொரோனா கால ஊரடங்கால் நசிந்துவிட்ட திரைப்படத் தொழிலை மீட்டெடுக்க பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதேபோன்று தமிழக அரசும் தமிழ் சினிமாவை காப்பாற்ற பல சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்று டி.ராஜேந்தரின் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அண்டை மாநிலங்களான தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநில அரசுகள் கலைத்துறை மற்றும் திரைத்துறை தற்போது சந்தித்து வரும் இன்னல்களைக் கருத்தில் கொண்டு சிறப்பான பல திட்டங்களை அறிவித்துள்ளது, சினிமா மறுவாழ்வு பெறுவதற்காக ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது, அந்த திட்டம் அந்த மாநிலத்தில் பல்வேறு வகையில் திரைத்துறை மற்றும் கலைத்துறை பொலிவு பெறும் வகையில் உள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படத்துறை அதலபாதாளத்தில் சிக்கிப் பல இன்னல்களைச் சந்தித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஆந்திர அரசும் தெலுங்கானா அரசும் பல்வேறு நலத்திட்டச் சலுகைகளை வழங்கியது போல் தமிழக அரசும் பல்வேறு சூழ்நிலைகளில் தமிழக திரைப்படத்துறைக்குப் பக்கபலமாக இருந்து பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது. அதனை யாரும் மறுக்க முடியாது.

அதே வேளையில் இதுபோன்ற திரைப்படத்துறை இந்த பேரிடர் காலகட்டத்தில் பல இன்னல்கள் சந்தித்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆகையால் தயவு கூர்ந்து இதனை கருத்தில் கொண்டு அண்டை மாநிலங்கள் வழங்கிய திட்டங்களை விட குறிப்பாக உள்ளூர் கேளிக்கை வரி ரத்து செய்தல் போன்ற சிறப்பான சலுகைகளை தமிழ் திரைப்படத்துறைக்கு வழங்கி, வாழ்வில் புதுப் பொலிவடைய வழிவகை செய்யுமாறு தமிழ் திரைத்துறை சார்பாக அன்புடன் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *