Share on Social Media


இந்த வருச ஊரடங்கு வரைக்கும் அதே நிலைமையிலதான் இருக்கு. இந்த மாதிரி சூழ்நிலையில விவசாயிகள் கண்ணீரைத் துடைக்க வேண்டிய அரசே, கண்ணீர் சிந்தக் காரணமா இருக்கலாமா? தற்போது மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்துலயாவது விவசாயிகளுக்கு அரசு உதவணும்” என்றார்.

இதுகுறித்து வேளாண் விற்பனைத்துறை அதிகாரிகள் தரப்பில் பேசினோம், “ஊரடங்கு நாள்களில் பொது மக்களுக்கு காய்கறிகள், பழங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக, விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை பொதுமக்களிடம் அவர்களே நேரடியாக விற்பனை செய்யும் வகையில் மாவட்டம் வாரியாகத் தோட்டக்கலைத்துறை, வேளாண்விற்பனைத்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளோம்.

காய்கறி விற்பனை

காய்கறி விற்பனை

அந்த எண்ணை, விவசாயிகள் தொடர்பு கொண்டுப் பேசினால், விவசாயிகளின் விளைபொருளை சந்தைப்படுத்திட தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கிறோம். விவசாயிகள் தாங்களாகவே வாகனம் மூலம் விற்பனை செய்ய விரும்பினால், அதற்கான அனுமதியையும் வழங்கி வருகிறோம். முறையாக அனுமதி பெற்ற வாகனங்களை செல்ல விடாமல் அதிகாரிகளோ, போலீஸாரோ தடுப்பதில்லை. அப்படி ஏதும் நிகழ்ந்தால் வேளாண் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். விளைபொருளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறோம்” என்றனர். இதுபோன்ற சூழலில் விவசாயிகளுக்கு முழு மூச்சாக உதவுவதும் அரசின் கடமையாகும்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *