Share on Social Media


காலப்போக்கில் மத்திய மாநில அரசுகளின் தவறான வழிநடத்துதலால், பாரம்பர்ய நெல் ரகங்கள் காணாமல் போயின. நம் விவசாயிகள், நவீன நெல் ரகங்களுக்கு மாறியதோடு, அதிகளவில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இதனால் விவசாயிகளுக்கு செலவு அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், இதைச் சாப்பிடும் மக்கள் நோய் நொடிகளுக்கும் ஆளானார்கள்.

இந்நிலையில்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினார். அவரது முயற்சிகளுக்கு பக்கபலமாக நின்றவர்தான் நெல் ஜெயராமன். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் ஆதிரெங்கம் கிராமத்தில் `நமது நெல்லை காப்போம்’ அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக நெல் திருவிழாவை நடத்தி, பாரம்பர்ய நெல் விதைகளை விவசாயிகளிடம் பரவலாக்கினார். இந்நிலையில்தான் புற்றுநோய் பாதிப்பால் இரண்டு ஆண்டுக்கு முன்பு நெல் ஜெயராமன் காலமானார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 2021

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 2021

இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பர்ய நெல் ரகங்களை விவசாயிகளிடம் பரவலாகக் கொண்டு செல்லவும், நெல் ஜெயராமன் ஆற்றி வந்த உயரிய சேவைக்கு மரியாதையும் அங்கீகாரமும் அளிக்கும் விதமாகவும் அவரது பெயரில் பாரம்பர்ய நெல் மையம் அமைக்க தமிழக அரசு தற்போது முடிவெடுதுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி ராமலிங்கம், “தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கக் கூடியது. இன்றைய காலகட்டத்தில் இது மிகவும் அவசியமானது. ஆனால், இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை மிகவும் குறைவு. 47.87 லட்சம் ரூபாய் என்பது மிகவும் சொற்ப தொகை. இந்தத் தொகையை முழுமையாக நேர்மையாகச் செலவு செய்தாலுமேகூட இதனால் உருப்படியாக எதுவும் நடந்துவிட வாய்ப்பில்லை.

இத்தொகையில் அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் கமிஷன் அடித்தால், அதுபோக, இதில் என்ன பெரிதாக மிச்சமிருக்கும். வேளாண்மைத்துறையின் மற்ற திட்டங்களுக்கெல்லாம் கோடி கோடியாக நிதி ஒதுக்குகிறார்கள். குறிப்பாக, ரசாயன வேளாண்மை தொடர்பான செயல்பாடுகளுக்கு அதிகளவில் பணம் ஒதுக்கப்படுகிறது. ஆனால், மக்களின் வாழ்க்கையை ஆரோக்கியமாகப் பாதுகாக்கக்கூடிய இயற்கை வேளாண்மைக்கும் பாரம்பர்ய நெல் ரகங்களுக்கும் அதிகமாக நிதி ஒதுக்க, ஆட்சியாளர்களுக்கு மனம் வரவில்லை. தற்போதைய அறிவிப்பு வெறும் கண் துடைப்பாக இருந்துவிடக்கூடாது.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *