Share on Social Media


சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த சி.சாத்தமங்கலத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த சி.சாத்தமங்கலத்தில் குறுவை அறுவடை சீசனுக்காக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறந்தது. இங்கு சி.சாத்தமங்கலம், சக்திவிளாகம் பகுதி விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்கு கொண்டு வந்து குவித்துள்ளனர். இங்கு கடந்த 29ம் தேதி வரை மட்டுமே கொள்முதல் செய்து தற்போது நிறுத்தியுள்ளனர். நேற்று முன்தினம் பெய்த கனமழையினால் சுமார் 5, 000 மூட்டையளவில் நெல் நனைந்தன.மழையில் நனைந்த நெல் முளைத்து நாற்றாக வளர்ந்து வருகிறது. இதனால் அதிக செலவு செய்து சாகுபடி செய்த விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல் கவலையில் உள்ளனர். அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து தேங்கியுள்ள நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *