Share on Social Media


விவசாயி ஒருவர் எடுத்த அந்தக் காட்சியில் நெல் கொள்முதல் நிலைய ஊழியர் விவசாயி ஒருவரிடம் லஞ்சம் வாங்குவது இடம்பெற்றிருக்கிறது. சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோ குறித்து பேசிய வீடியோ எடுத்த விவசாயி, “சிறுமுளை நெல் கொள்முதல் நிலையத்தில் 41 நெல் மூட்டைக்கு ரூ.2,050 பெற்றுக்கொண்டுதான் என்னிடம் கொள்முதல் செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டால் கீழிருந்து மேல்வரை அனைத்து ஊழியர்களுக்கும் இதில் பங்கு செல்கிறது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்றனர். மேலும், நாங்கள் புகார் தெரிவித்தால் கொள்முதல் நிலையத்தை மூடி விடுவோம் என்று மிரட்டியும் பணம் பறிக்கிறார்கள். அதனால்தான் வேறு ஒரு விவசாயி தனது 115 மூட்டை நெல்லுக்கு லஞ்சம் கொடுப்பதை வீடியோ எடுத்து பதிவிட்டேன்” என்றார்.

விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் ஊழியர்கள்

விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் ஊழியர்கள்

இதுகுறித்து விளக்கம் கேட்க கடலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியத்தைத் தொடர்பு கொண்டோம்.

“சமூக வலைதளங்களில் அந்தக் காட்சியைப் பார்த்தவுடன் உடனடியாக அதிகாரிகள் அங்கு ஆய்வை மேற்கொண்டனர். குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் `மேஸ்திரி’ என்ற அந்த நபர் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்தான். அந்தப் பகுதியில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் வேறொரு விவசாயி தோட்டத்தில் வேலை செய்ததற்கான ஊதியத்தைத்தான் அங்கு பெற்றார் என்று அதிகாரிகள் அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.

அதேபோல நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்ய தாங்கள் லஞ்சம் எதுவும் கொடுக்கவில்லை என்று அந்தப் பகுதி விவசாயிகள் தெரிவித்திருக்கின்றனர். இருந்தாலும் நெல் கொள்முதல் நிலையத்தில் பணம் வாங்கியது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தியிருப்பதால் அந்த ஊழியரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறோம். அதேபோல மாவட்டத்திலுள்ள 53 நெல் கொள்முதல் நிலையங்களிலும் விசாரணை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்” என்றார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *