Share on Social Media


வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகத் தென் மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்வதால் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையும் 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையும் நிரம்பி வழிகின்றன.

மணிமுத்தாறு அருவியில் பாயும் வெள்ளம்

156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை, கடனா அணை, ராமநதி அணை உள்ளிட்டவையும் நிரம்பி வழிகின்றன. அணைகள் நிரம்பிய நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.

அணைகளுக்கு வரும் நீர் அனைத்தும் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், மழைநீர் என ஆற்றில் சுமார் 70,000 கனஅடி அளவுக்குத் தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. நெல்லையில் குறுக்குத்துறை முருகன் கோயில் மட்டுமல்லாமல் ஆற்றுக்குள் இருந்த மண்டபங்கள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன.

flood 5 Tamil News Spot
சுற்றுலா மையம் போல் ஆற்றைப் பார்வையிட வரும் கூட்டம்

தாமிரபரணி ஆற்றில் ஜடாயு தீர்த்தம் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 1992-ம் ஆண்டுக்குப் பிறகு ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் சுற்றுலா வருவதுபோல ஆர்வத்துடன் வந்து வெள்ளத்தைப் பார்வையிட்டு செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர். ஆற்றுப் பாலம் அமைந்துள்ள பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாகக் கரையோரங்களில் உள்ள பல்வேறு குடியிருப்புப் பகுதிக்குள்ளும் தண்ணீர் நுழைந்துள்ளது. வெள்ளப் பெருக்கு காரணமாக வயல்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் தண்ணீர் புகுந்ததால் அனைத்தும் சேதமடைந்துள்ளன.

flood 2 Tamil News Spot
தாமிரபரணி வெள்ளத்தால் நீரில் மூழ்கிய விளை நிலங்கள்

வாழைத் தோட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி ஆற்றில் சுமார் 70,000 கன அடி அளவுக்குத் தண்ணீர் செல்வதால் பாதுகாப்பு கருதி தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் நெல்லையில் முகாமிட்டுள்ளனர். இதுவரை 5-க்கும் மேற்பட்டு வீடுகள் இடிந்துள்ளன. மழையால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

தொடர் மழையின் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி, கோதையாறு ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

flood 4 Tamil News Spot
மாஞ்சோலை சாலையில் ஏற்பட்ட மண்சரிவு

மாஞ்சோலை மலைப் பகுதியில் மலைச் சரிவு ஏற்பட்டிருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகியிருக்கிறது. அதனால் அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானதால், மலைச் சரிவை சீர்செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed