Share on Social Media


நெல்லை மாவட்டம் மூனைஞ்சிப்பட்டி, சந்தைத் தெருவைச் சேர்ந்தவர் ராமர் (வயது 36). விவசாய கூலித் தொழிலாளியான இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ராமர்

ராமர் கூலி வேலைக்குச் செல்லும்போது அவரது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த சுடலை (வயது41) என்பவரும் செல்வது வழக்கம். அதனால் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவ்வப்போது இருவரும் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

வழக்கம் போலவே நேற்று இரவு ராமரும் அவரது நண்பர் சுடலையும் சேர்ந்து மது அருந்தியிருக்கிறார்கள். பின்னர் இருவரும் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் கிணற்றின் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இருவருக்கும் போதை தலைக்கேறியுள்ளது.

Also Read: சென்னை: மோதலான வாய்த் தகராறு; செங்கல்லால் அடித்து இளைஞர் கொலை! – போதையில் நடந்த கொடூரம்

போதையில் இருந்த இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒன்றாகச் சேர்ந்து குடித்த இருவரும் ஒருவரையொருவர் அடிக்கப் பாய்ந்துள்ளனர். போதையில் நடந்த இந்த சண்டையின்போது ராமரை அவரது நண்பரான சுடலை கிணற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளார்.

கிணற்றுக்குள் விழுந்த ராமருக்கு தலையில் அடிபட்டதால் தண்ணீரில் தத்தளித்து மூழ்கியுள்ளார். பின்னர் போதையில் இருந்த சுடலைக்கு ராமரை தான் கொலை செய்ததே தெரியாமல் வீட்டுக்குச் சென்றுவிட்டார். ராமர் வீட்டுக்கு வராத நிலையில் இன்று காலை முதல் அவரது குடும்பத்தினர் தேடத் தொடங்கியிருக்கிறார்கள்.

murder Tamil News Spot
murder

இரவில் போதையில் நடந்த சம்பவம் மறந்துவிட்டதால் சுடலையும் சேர்ந்து தேடியிருக்கிறார். அப்போது , ‘‘என்னோடு சேர்ந்து குடித்த ராமர் எங்கே போயிருப்பான்..’’ எனச் சொல்லியபடியே அவர் தேடியுள்ளார். அதனால் அவரிடம் கிராம மக்கள் தீவிரமாக விசாரித்தபோது, இருவரும் கிணற்றின் அருகில் பேசிக் கொண்டிருந்த விவரம் தெரிந்திருக்கிறது.

ராமர் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என்கிற சந்தேகம் கிராமத்தினருக்கு ஏற்பட்டதால் நாங்குநேரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றுக்குள் தேடியிருக்கிறார்கள். கிணற்றில் 30 அடி ஆழத்துக்கு இருந்த தண்ணீரை வெளியேற்றியதும் ராமரின் உடல் கிடப்பது தெரியவந்திருக்கிறது.

death murder Tamil News Spot
கைது செய்யப்பட்ட சுடலை

பின்னர் சுடலையிடம் விசாரித்தபோது தங்களுக்குள் தகராறு ஏற்பட்டதும் தள்ளி விட்டதாகச் சொல்லியிருக்கிறார். அதன் பின்னர் ராமரின் உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர், மூலைக்கரைப்பட்டி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மது போதையில் நண்பனை கொலை செய்த சுடலையை போலீஸார் கைது செய்தனர். மதுபோதையில் ராமர் உயிர் பறிபோன நிலையில், சுடலை கைது செய்யப்பட்டுள்ளார். போதை காரணமாக இரு குடும்பங்கள் சீரழிந்த நிலையை எண்ணி இருவரின் உறவினர்களும் சோகத்தில் உள்ளனர்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *