Share on Social Media


சென்னை: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள புனித அந்தோணியார் கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 140 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம்  மற்றும் வள்ளியூர் யுனிவர்சல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 180 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றை காணொலி காட்சி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் இருந்தபடி திறந்து வைத்தார்.
இதன்மூலம், கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட வள்ளியூர் மற்றும் ராதாபுரம் வட்டார மக்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி மற்றும் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலைமாறி, இனி அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே  சிகிச்சை பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

மேலும், இந்த புதிய கொரோனா சிகிச்சை மையங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் அருகில் உள்ள திசையன்விளை மற்றும் வடக்கன்குளம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம்  வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில், திருநெல்வேலியில் இருந்து சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, ஞானதிரவியம் எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள் ரூபி ஆர்.மனோகரன்,  எம். அப்துல் வகாப், முன்னாள் பேரவை தலைவர் ஆர்.ஆவுடையப்பன்,  திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோரும், தலைமை செயலகத்தில் இருந்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோரும் கலந்து கொண்டனர்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *