dummy noimg Tamil News Spot
Share on Social Media

புதுடில்லி,:’கொரோனா தடுப்பு நெறிமுறைகள் மீறப்பட்டால், தேர்தல் பிரசார கூட்டத்தை ரத்து செய்யவும், ஓட்டுப்பதிவை தள்ளி வைக்கவும், தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவது மிக கடுமையான பணி’ என, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்கள் தெரிவித்துள்ளனர்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும், 28ல் துவங்கி, அடுத்த மாதம், 3 மற்றும் 7ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடக்கிறது. மேலும் சில மாநிலங்களில், இடைத் தேர்தல்கள் நடக்கின்றன. கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்களை, தொற்று பரவல் தடுப்பு நெறிமுறைகளுடன் நடத்த, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.

கமிஷன் எச்சரிக்கை

‘விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்’ என, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.கொரோனா நெறிமுறைகளை மீறுபவர்கள் மீதான நடவடிக்கை குறித்து, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்கள், வி.எஸ்.சம்பத், ஓ.பி.ராவத், குரேஷி உள்ளிட்டோர், கருத்து தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது:ஒரு வேட்பாளரோ அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சியோ, நெறிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கலாம். ஒட்டுமொத்தமாக நெறிமுறைகள் மீறப்பட்டால், தேர்தலை தள்ளிப்போட முடியாது. அசாதாரணமான சூழலில் தேர்தலை நடத்தும்போது, இதுபோன்ற குறைகளை எதிர்கொள்ளத் தான் வேண்டும்.அதற்காக, தேர்தல் கமிஷன் எதையும் கண்டுகொள்ள தேவையில்லை என, அர்த்தமல்ல.

இது மக்கள் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது.எனவே, அவர்களால் முடிந்தவரை, சிறப்பாக செயல்பட வேண்டும். இதில், 100 சதவீத வெற்றி என்பது சாத்தியமில்லை.தினசரி அடிப்படையில், விதிமுறை மீறல்களை கவனித்து, வழக்கு பதிவு செய்யலாம். மேலும், சில தொகுதிகளில் ஓட்டுப்பதிவை ஒத்திவைக்கும் நடவடிக்கைகளை எடுக்கலாம்.

பாகுபாடின்றி ரத்துகட்டுப்பாடுகளை மீறுபவர்களை, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கைது செய்து, ஒன்று அல்லது இரண்டாண்டுகள் சிறையில் அடைக்க வழியுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் மீது, இதுபோன்ற நடவடிக்கை எடுக்க முடியாது. சட்டத்தை மீறும் அரசியல் கட்சிகளின் பொது கூட்டத்தை, தேர்தல் கமிஷன் கட்சி பாகுபாடின்றி ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *