Share on Social Media

புதுடில்லி: ‘‘ஒலிம்பிக் என்று வந்ததும், பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து மனதில் ஊஞ்சலாடுகிறது. இதுவே நெருக்கடிக்கு காரணமாகிறது,’’ என தீபிகா குமாரி தெரிவித்தார். 

இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி. ‘ரீகர்வ்’ பிரிவில் உலகின் ‘நம்பர்–1’ வீராங்கனையாக ஒலிம்பிக்கில் களமிறங்கினார். தனது முதல் இரு ஒலிம்பிக்கில் ஏமாற்ற இவர், இம்முறையும் பதக்கம் வெல்லவில்லை. உலக சாம்பியன்ஷிப்பில் ஒரே நாளில் ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்ற போது, ஒலிம்பிக்கில் தனிநபர், கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை மட்டும் தான் கிடைத்தது.

இதுகுறித்து தீபிகா குமாரி கூறியது:

ஒலிம்பிக் என்ற அந்த ஐந்து வளையங்கள் தான் அதிக நெருக்கடி கொடுத்து விட்டது. நாங்கள் பதக்கம் வெல்லவில்லை என ஒவ்வொருவரும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தனர். நாங்களும் ஆயிரத்துக்கும் அதிகமான முறை இதுகுறித்து யோசித்து விட்டோம். கடைசியில் இதுவே மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. போட்டியின் போது பெரியளவில் தொல்லையாக அமைந்தது. 

உண்மையில் எங்கு தவறு நடந்தது, ஏன் நடந்தது என எங்களை நாங்களே சுயபரிசீலனை செய்து பார்க்க வேண்டிய நேரம் வந்துள்ளது. ஒரு சில விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காண வேண்டும். ஒட்டுமொத்தமாக எங்கள் கண்ணோட்டத்தை மாற்றியாக வேண்டும். ஏனெனில் உலக கோப்பை, உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் போது பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் தொடர்ந்து அதையே நினைத்துக் கொண்டிருக்க மாட்டோம். 

அதேநேரம் ஒலிம்பிக் என்று வந்தவுடன், பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு வெளியே வர முடியவில்லை. இதிலிருந்து மீள முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *