Share on Social Media

உலகின் தலைசிறந்த மியூசிக் DJ-க்கள் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள். சரி, எல்லாம் கலையாகவே இருக்கிறது… விவசாயம், உணவு எல்லாம் எப்படி என்று நீங்கள் கேட்கலாம். விவசாயத்தில் மிகப்பெரும் வளர்ச்சியைக் கொண்ட நாடு. நம் நாட்டில் பல முறை நெதர்லாந்து வெங்காயமும், கேரட்டும் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. காய்கறிகள் மட்டுமல்ல கஞ்சா செடி வளர்ப்பதிலும் முன்னோடிதான். நெதர்லாந்து கஞ்சாவிற்கு மார்க்கெட்டில் தனி மரியாதை.

(அங்கு கஞ்சாவிற்கு அனுமதி இருக்கிறது).

Van Gogh Museum

Van Gogh Museum
Amsterdam, Netherlands

காய்கறிகள், பூக்கள் மட்டும்தான் ஏற்றுமதி செய்கிறார்களா?! என்றால் தமிழகத்திற்கு சமீபத்தில் 20 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை கொடுத்துள்ளது நெதர்லாந்து. கொரோனா தொற்று நெதர்லாந்தையும் விட்டுவைக்கவில்லை. 15 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்பு 15 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு என்று தவித்தது. இருப்பினும், முதியோருக்கு முன்னுரிமை, பாதுகாப்பு நெறிமுறைகளுடன் அங்காடிகள் திறப்பு, உடற்பயிற்சிக்கு தடையில்லை என வித்தியாசமான ஊரடங்கை அமல்படுத்தியது அரசு… ஆனால், எங்கேயும் பாதுகாப்பு குறையாத வண்ணம் கிருமிநாசினி தெளிப்பு, தனிமனித இடைவெளி என கொரோனாவை கட்டுப்படுத்திய ஒரு முன்னுதாரன நாடாக திகழ்ந்தது நெதர்லாந்து. கொரோனாவால் இந்தியர்கள், நெதர்லாந்து செல்ல விமானத் தடை இருந்த நிலையில் அதை தற்போது நீக்கியுள்ளது நெதர்லாந்து அரசு.

கொரோனா பரவல் முடிந்து, முதல் பத்தியில் சொன்னது போன்ற ஒரு பயணத்தை சீக்கிரம் மேற்கொள்வோம்…

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *