Share on Social Media


திருப்பூர்: கடந்த மாதம், கிலோவுக்கு 50 ரூபாய் நுால் விலை உயர்ந்த நிலையில், இன்று பெரிய மாற்றம் இருக்காது என, தொழில்துறையினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.பருத்தி பஞ்சு விலை கடுமையாக உயர்ந்ததால், தமிழகத்தில் உள்ள நுாற்பாலைகள், நுாலிழை விலையை உயர்த்தி வருகின்றன.

ஒவ்வொரு மாதமும், பருத்தி பஞ்சு விலையை அடிப்படையாக கொண்டு, நுால் விலை நிர்ணயிக்கப்படுகிறது.இதுவரை இல்லாத அளவுக்கு, நுால்விலை, கிலோவுக்கு 50 ரூபாய் உயர்ந்ததால், ஒட்டுமொத்த ஜவுளித்துறையும் அதிர்ச்சி அடைந்தது. திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் இணைந்து, கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.இன்று, 1ம் தேதி என்பதால், காலை, 10:00 மணிக்கு, நுாற்பாலைகள் நுால் விலை குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளன.

கடந்த 2020 நவ., மாதத்தில், ‘செமிகோம்டு’ ரகத்தில், வரி நீங்கலாக, 20ம் நம்பர் – கிலோ 183 ரூபாய்; 24 -191 ரூபாய்; 30 – 202; 34 – 216 ரூபாய்; 40 – 223 ரூபாயாக இருந்தது. தற்போது, 20ம் நம்பர் – 295 ரூபாய்; 24 – 305 ரூபாய்; 34 – 335 ரூபாய்; 40- 335 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.’கோம்ப்டு’ ரக நுால், 2020ம் ஆண்டில், 20ம் நம்பர் – 193 ரூபாய்; 24 – 201 ரூபாய்; 30 – 212 ரூபாய்; 34 – 226 ரூபாய்; 40 -283 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது, 20 – 305 ரூபாய்; 24 -315 ரூபாய்; 30 – 325 ரூபாய்; 34 – 345 ரூபாய்; 40 – 365 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.கடந்த ஓராண்டு இடைவெளியில், நுால் விலை, கிலோவுக்கு 112 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

மாதாமாதம் நுால் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும், இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த மாதம், கிலோவுக்கு 50 ரூபாய் உயர்ந்ததால், ஒட்டுமாத்த ஜவுளித்துறையும் அதிர்ந்துவிட்டது.தொழில்துறையினர் கூறுகையில், ‘பின்னலாடை தொழில்துறையினர் நலன்கருதி, நுால்விலையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்த வேண்டும். மாதாமாதம் நுால் விலை உயர்வதால், ஆர்டரை குறித்த விலைக்கு அனுப்ப முடிவதில்லை. கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளதால், இம்மாதம் நுால் விலையில் மாற்றம் இருக்காது என்று நம்புகிறோம்,’ என்றனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *