Share on Social Media


அப்போது கூடலூரிலிருந்து கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொரப்பள்ளி வனத்துறை சோதனைச்சாவடி அருகில் 38 மூட்டைகள் இருந்ததைக் கண்டனர். சந்தேகமடைந்த வட்ட வழங்கல் துறையினர், அந்த மூட்டைகளை சோதனை செய்தனர். அப்போது, அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டதால், அரிசி மூட்டைகளுக்கு உரிமைக்கோர யாரும் முன்வரவில்லை. அதையடுத்து, 38 மூட்டைகளில் இருந்த சுமார் 2 டன் ரேஷன் அரிசியைக் கைப்பற்றி கூடலூர் நுகர்பொருள் வாணிப கழக கிடங்குக்கு வட்ட வழங்கல் அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.

கர்நாடகாவுக்கு கடத்தப்படவிருந்த தமிழக ரேஷன் அரிசி

கர்நாடகாவுக்கு கடத்தப்படவிருந்த தமிழக ரேஷன் அரிசி

குடிமைப் பொருள் கடத்தல் குறித்து நம்மிடம் பேசிய வருவாய்த்துறை அதிகாரி ஒருவர், “சமீபகாலமாகக் கர்நாடகா, நீலகிரி இடையே சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சட்டவிரோதமாக இரண்டு மாநிலங்களுக்கு ரேஷன் பொருள்களைக் கடத்தும் கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்‌. இதற்காகவே புதிதாகத் தனிப்படை ஒன்றையும் அமைத்திருக்கிறோம். ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வெளிமாநிலங்களுக்குக் கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதியப்படும்” என்றார்.

இது குறித்து கூடலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவ சுப்ரமணியன் நம்மிடம் பேசுகையில், “தமிழ்நாட்டில் மக்களுக்கு இலவசமாக அரிசி ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் கடத்தல் கும்பல்கள், ரேஷன் கடைகளில் ஊழியர்களை அணுகி, குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி வெளி மாநிலங்களுக்குக் கடத்துகிறார்கள். அப்படிக் கடத்தும் அரிசியை பாலிஷ் செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் இங்குள்ள மக்களுக்கு நல்ல அரிசியைக் கொடுக்காமல் பதுக்கி மோசமான அரிசியை சில ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கி வருகிறார்கள். இதைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ தெரியவில்லை” என்றார் ஆதங்கத்துடன்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *