Share on Social Media


கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில்,தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 45 வயதிக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

covid vaccine

கொரோனா தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் 11ம் தேதி துவங்கி 16 ஆம் தேதியான இன்றுவரை சிறப்பு தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்டோருக்கான முகாமில் நாள்தோறும் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள கிராம பகுதிகளில் இருந்து காலை முதலே ஏராளமான முதியவர்கள் மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்தனர். ஒரு சிலருக்கு தடுப்பூசி செலுத்திவிட்டு மற்றவர்களிடம் கொரோனா தடுப்பூசி ஸ்டாக் இல்லை என தெரிவித்தனர். இதில் அதிருப்தியான முதியவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ARN 0369 Tamil News Spot
covid vaccine

தடுப்பூசி செலுத்திக்கொள்ள நீண்ட நேரமாக காத்திருந்த ஊட்டி ஆடாசோலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்,” இன்னைக்கி வந்து கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கனும்னு சொன்னாங்க. காலைல மோதல் பஸ் புடிச்சி இங்கவந்து உக்காந்திருந்தோம். சீட்டெல்லாம் குடுத்துட்டு கடைசில மருந்து முடிஞ்சிடிச்சி. சொல்லும்போது வாங்கனு அனுப்புறாங்க. கூலி வேலைய விட்டுட்டு பஸ்ஸுக்கு காசுபோட்டு இங்க வந்தா இப்டி சொல்றாங்க”என புலம்பிய படியே போனார்.

இந்த விவகாரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், “நீலகிரி மாவட்டத்தில் 33 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இன்று காலை சுமார் 1 மணி நேரம் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு மருந்துகள் தீர்ந்துவிட்டன. நாளை முதல் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை செய்யப்படும்” என்றனர்.

ARN 0372 Tamil News Spot
covid vaccine

கொரோனா தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் முகாம் ஏற்படுத்திவிட்டு, தடுப்பூசி ஸ்டாக் இல்லை என பொது மக்களை திருப்பி அனுப்பியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *