Share on Social Media


‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தில், சென்னையில் உள்ள 57 நீர்நிலைகள், 2,600 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட உள்ளன.

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், அவர் சென்னை மேயராக இருந்த காலத்தில் கொண்டு வந்த சிங்கார சென்னை திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சிங்கார சென்னை 2.0 என்ற பெயரில் திட்டம் துவங்கப்பட்டு, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், நீர்நிலைகள் சீரமைப்பு முக்கிய பங்கு வகிக்க உள்ளது. குறிப்பாக, கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றை சீரமைப்பதுடன், அதன் கிளை நீர்நிலைகளையும் சீரமைக்க, அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி, தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு, நேற்று முன்தினம், சென்னையில் உள்ள நீர்நிலைகளை நேரில் ஆய்வு செய்தார்.

சென்னையில் உள்ள அனைத்து நீர்நிலை பகுதிகளையும் சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி, அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில், கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய்கள் பிரதானமானதாக உள்ளன. இதில், கூவம் ஆறு, திருவள்ளூர் மாவட்டம் கூவம் கிராமத்தில் துவங்கி, சென்னையில் பருத்திப்பட்டு வழியாக நேப்பியார் பாலம் வரை பாய்கிறது.இதில், பருத்திப்பட்டு முதல் இருக்கும் ஆறு தான், மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஆற்று நீரில், விவசாயம் செய்யப்படுகிறது. எனவே, பருத்திப்பட்டு முதல் நேப்பியார் பாலம் வரை உள்ள 32 கி.மீ., துாரத்திற்கு சீரமைப்பு செய்யப்பட உள்ளன.அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் துவங்கும் அடையாறு ஆறு, சென்னை அடையாறு பகுதியில் உள்ள திரு.வி.க., பாலம் முகத்துவாரத்தில் கலக்கிறது. அடையாற்றின் மொத்த துாரமான 42 கி.மீ.,க்கும் சீரமைக்க வேண்டியுள்ளது. பங்கிங்ஹாம் கால்வாய், ஆந்திர மாநிலத்தில் துவங்கி, தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வரை பாய்கிறது. இதில், சென்னை எண்ணுார் பகுதியில் இருந்து கோவளம் முட்டுக்காடு வரை 48 கி.மீ., துாரத்திற்கு சீரமைக்கப்பட உள்ளது.மேலும், எண்ணுார் கழிமுக பகுதி, கோவளம் கழிமுக பகுதி ஆகியவையும் சீரமைக்கப்பட உள்ளன. இதைத்தவிர, சென்னையில், ஓட்டேரி நல்லா, மாம்பலம் கால்வாய் உள்ளிட்ட 52 கிளை ஓடைகள் உள்ளன. இவை, 100 கி.மீ., வரை இருக்க கூடும்.இந்த நீர்நிலை பகுதிகளில், கூவம், அடையாறில் உள்ள ஆக்கிரமிப்புகள் மட்டுமே கணக்கிடப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. பக்கிங்ஹாம் கால்வாய் உட்பட கிளை ஓடைகள் ஆக்கிரமிப்புகள் கணக்கிடப்பட வேண்டும்.இப்பணிகள் அனைத்தும், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையுடன், சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம், பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இதற்காக, உத்தேசமாக 2,600 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை, மூன்றாண்டுகளில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

ஆனால், கடலோர பகுதிகளில், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற வேண்டியுள்ளது.தற்போது, கூவம், அடையாறு மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளது. மற்ற கழிமுகப்பகுதிகள் போன்றவற்றிற்கு அனுமதி பெறுவதில் சில காலம் தாமதமாகும். எனவே, திட்டமிட்ட காலத்தை விட, தாமதம் ஏற்படலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

என்னென்ன பணிகள்? துார் வாருதல் தடுப்பு சுவர் கட்டுதல் பாதுகாப்பு வேலி மரங்கள், தாவரங்கள் நடுதல் கழிவு நீர் இடைமறிந்து, சுத்திகரிப்பு செய்து நீர்நிலைகளில் விடுதல் திடக்கழிவுகள், கட்டட கழிவுகள் அகற்றுதல் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல்
– நமது நிருபர் —

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *