Share on Social Media


Kapiva, ஒரு மாடர்ன் ஆயுர்வேத ஊட்டச்சத்து பிராண்ட் ஆகும். ஆரம்ப காலம் முதலே, ஆயுர்வேதத்தின் திறனை மக்கள் அனைவரும் அறியும்படி மேற்கொண்டுவர வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது. தொடங்கப்பட்ட நாளில் இருந்து இந்நிறுவனம் அளித்து வரும் பொருட்கள் அனைத்தும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலே தயாரிக்கப்பட்டு வருகின்றன. உலக நீரிழிவு நாள் முன்னிட்டு Kapiva ஆயுர்வேத ஆராய்ச்சியை தழுவி அன்றாட உணவுமுறை பழக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது, இது இந்தியர்கள் நீரிழிவை எதிர்த்து போராட சக்தி அளிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த Kapiva Dia Free Juice 11 ஆயுர்வேத மூலிகைகள், 45 நெல்லிக்கனியின் ஊட்டச்சத்து, 24 நாவல் பழ விதைகள் மற்றும் ஒரு பெரிய பாகற்காயின் நன்மைகள் அனைத்தும் கொண்டிருக்கிறது. இந்த ஜூஸ் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, உடற்சக்தியை ஊக்கப்படுத்தி நீரிழிவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வலிமையை அளிக்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம், Dia Free Juice போன்றவை நீரிழிவு பிரச்சனையுடன் வாழ்ந்து வரும் நிறைய குடும்பங்களுக்கு மிக மிக அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. உலகளவில் 10ல் ஒரு வயது வந்தோருக்கு நீரிழிவு பிரச்சனை இருக்கிறது என சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் சமீபத்திய ஆய்வு தகவல்கள் கூறுகின்றன. மேலும், இந்தியர்களுக்கு இன்சுலின் & பரம்பரை மரபணு சார்ந்து அதிகம் நீரிழிவு பிரச்சனை உண்டாகிறது எனவும் அறியப்படுகிறது.

நீரிழிவும் ஆயுர்வேத இரகசியங்களும்!

மருத்துவர் ஆனந்த் திவிவேதி, 30 ஆண்டுகால ஆயுர்வேத மருத்துவ முன் அனுபவம் கொண்டவர், இவர் Kapiva Academy of Ayurvedaவின் உறுப்பினராக இருக்கிறார். இவர்,” வாழ்நாள் பிரச்சனையாக கருதப்படும் நீரிழிவை ஆரம்பத்திலேயே கண்டுப்பிடித்து அதற்கு சரியான முறையில் சிகிச்சை மேற்கொண்டால், அதை ரிவர்ஸ் செய்து குணப்படுத்தலாம் என கூறுகிறார். பாகற்காய், நெல்லிக்கனி, நாவல் பழம் மற்றும் சீந்தில் போன்றவை கார்போஹைட்ரேட் மெட்டபாலிசம் அதிகரிக்க செய்து இரத்த சர்க்கரை அளவை சீராக்கும் என ஆயுர்வேதத்திவில் பரிந்துரைக்கப்படுகிறது. பாகற்காய் கல்லீரல் இயக்கத்தை மேம்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது, நாவல் பழம் கொலஸ்ட்ரால் குறைக்கவும், சிறுநீர் பிரச்சனைக்கு தீர்வளிக்க கூடியது” என கூறுகிறார். மேலும், மருத்துவர் ஆனந்த், Dia Free Juice உருவாக்கும் போது இவரது குழு நீரிழிவு உள்ளவர்களுக்கு ஏற்படும் பிற பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டே உருவாக்கி இருக்கின்றனர். Kapiva Dia Free Juice போன்ற பொருட்களை தயாரிப்பது, துரித மற்றும் சர்க்கரை உணவுகளில் மூழ்கியிருக்கும் உலகிற்கு மூலிகைகளின் மகத்துவம் மற்றும் நிவாரண பயன்கள் பற்றி எடுத்துரைக்கும் முயற்சியாக இருக்கிறது.

நீரிழிவுக்கு ஏற்ற உணவு எது?

நீரிழிவை சமாளிக்க சிறந்த வழி ஊட்டச்சத்து நிறைந்த உணவு முறை. ஊட்டச்சத்து நிபுணர் நமாமி அகர்வால் kapiva Acadame of Ayurveda உடன் இணைந்து நீரிழிவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரத்தியேக டயட்-சார்ட் உருவாக்காகி இருக்கிறார். இவர்,” நீரிழிவை கட்டுப்படுத்த சரியான உணவு உட்கொள்ளதால் மட்டும் போதாது, அதை நீங்கள் சரியான அளவிலும், சரியான நேரத்திலும் உட்கொள்ள வேண்டும். இதில் சிறையான உணவு பழக்கம், உடற்பயிற்சி, உறக்கம் போன்றவையும் உள்ளடங்கும்”என கூறுகிறார்.

சரியான ஊட்டச்சத்துடன் உங்கள் நாளை துவக்குங்கள்

தினமும் காலை உணவிற்கு 20-30 நிமிடங்களுக்கு முன் Kapiva Dia Free Juice பருகுங்கள். 30ml நீரில் 30ml Dia Free Juice நன்கு கலந்து பருக வேண்டும்.

காலை உணவில் நார்ச்சத்து

காலை 8:30 – 9:30 க்குள் நார்ச்சத்து நிறைந்த காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். Kapiva Homestyle Masala Supergrain Oatsல் குறைந்தளவு கிளைசெமிக் மற்றும் நிறைய நார்ச்சத்தும் கிடைக்கிறது, இதை காலை உணவாக எடுத்துக் கொள்ள Kapiva பரிந்துரைக்கிறது. அல்லது மாற்றாக பாசிப் பருப்பு தோசை (Moong Dal Chilla) அல்லது பாலக்கீரை சப்பாத்தி (Spinach Thepla) சாப்பிடலாம்.

உணவுக்கு இடையே பழங்கள்!

சரியான சமையல் எண்ணெய் மற்றும் நல்ல கொழுப்புகளை உங்கள் உணவில் சேர்க்க வேண்டியது அவசியம்.

மதிய உணவு 1:30 – 2:00 மணிக்குள் எடுத்துக் கொள்ளவும். நீங்கள் எளிமையான மதிய உணவை Kapiva Organic Sesame Oil மூலம் சமைத்து சாப்பிடலாம். இதை காய்கறி போன்ற உணவு சமைக்க பயன்படுத்தலாம். நல்லெண்ணெய் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். மேலும், Kapiva A2 Desi Ghee பயன்படுத்தி பருப்பு – சாப்பாட்டுக்கு சேர்த்துக் கொள்ளலாம். நெய் ஆரோக்கியமான கொழுப்பாகும். இது செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

மாலையில் கலோரி குறைந்த ஸ்நாக்ஸ் – மூலிகை டீ

மாலை 4:30 – 5:00 டீ பருகுங்கள். Kapiva Madhu Tula Green Tea ஒரு சிறந்த மூலிகை தேநீர் ஆகும். இதில் 13 நாவல் விதை உட்பட 13 வகை மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன, நாவல் விதை இன்சுலின் சுரப்பியை ஊக்குவிக்கும் திறன் கொண்டதாகும்.

இரவு உணவு 8:30 PM

இரவு உணவு உட்கொள்ளும் முன் Dia Free Juice பருக மறந்துவிட வேண்டாம். இரவு உணவுக்கு முன் 30ml நீரில் 30ml Dia Free Juice கலந்து குடிக்கவும். இரவு உணவாக ஒரு கப் காளான், கீரை அல்லது பருப்பு சூப் உட்கொள்ளலாம்.

பரிந்துரைக்கப்படும் Dia Free Juice இயற்கை பொருட்களின் நற்குணங்கள் கொண்டிருக்கிறது. இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory) தன்மை மற்றும் ஆயுர்வேத மூலிகைகள் கெட்ட கொழுப்பை குறைக்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் நோய் எதிர்ப்பு இயக்கங்களை ஊக்குவிக்கும். இதில் இருக்கும் மூலிகைகள் சர்க்கரை அளவை குறைக்கும் வல்லமை கொண்டிருக்கிறது. மற்றும் இது நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களிடம் காணப்படும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகப்படியான பசி, நீர் தாகம் மற்றும் அதீத உடல் எடை குறைப்பு போன்றவற்றுக்கும் நல்ல தீர்வளிக்கிறது. kavipaவின் இந்த தயாரிப்பை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் 100 Dia Free Juice பயனாளர்களிடம் இருந்து காணப்பட்ட முடிவுகள் சில கீழே

Kapiva Dia Free Juice

  • 86% Dia Free Juice பயனாளர்களுக்கு, இரத்த சர்க்கரை அளவு குறைந்துள்ளது.
  • 81% Dia Free Juice பயனாளர்களின் உடற்சக்தி அளவு அதிகரித்துள்ளததை கண்டறிந்துள்ளனர்.

நீரிழிவு கட்டுப்படுத்துதல் என்பது குறைந்த கலோரி அல்லது குறைந்த GI டயட் மட்டும் அல்ல. முக்கியமாக, எந்த உணவு, எந்த அளவு உட்கொள்கிறீர்கள், சரியான இடைவேளைகளில் உட்கொள்கிறீர்களா, தேவையான அளவு நீர்ச்சத்து, உடற்பயிற்சி மற்றும் நல்ல உறக்கம் என அனைத்தும் சீராக இருக்க வேண்டும். இப்போது, வாழ்க்கை முறையும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீண்ட நேரம் அல்லது நாள் முழுவதும் உட்கார்ந்தே வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இந்த உலக நீரிழிவு நாள் முதல், சர்க்கரை உணவுகளுக்கு ‘நோ’ சொல்லி, நல்ல ஆரோக்கியம் பின்பற்றுவோம் என உறுதி கொள்வோம்

Disclaimer: இந்த கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் பார்வை/பரிந்துரை/கருத்து அனைத்தும் சம்மந்தப்பப்ட்ட பிராண்ட் மட்டுமே முழு பொறுப்பாகும். இது மருத்துவ ரீதியான பரிந்துரை அல்ல. இதை பின்பற்றும் முன்னர் மருத்துவர்களிடம் ஆலோசனை செய்துக் கொள்ளுங்கள். இந்த கட்டுரை Kapiva சார்பாக டைம்ஸ் இன்டர்நெட் ஸ்பாட்-லைட் குழு உருவாக்கியது ஆகும்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *