Share on Social Media

டோக்கியோ ஒலிம்பிக் தடகளத்தில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றது, ‘டாப்–10’ சிறந்த தருணங்கள் பட்டியலில் இடம் பிடித்தது. ஜப்பானில் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 23, தங்கம் (87.58 மீ.,) வென்றார். இதன்மூலம் 120 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில், தடகளத்தில் பதக்கம் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். தவிர இது, ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது தங்கம். ஏற்கனவே துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா (2008, பீஜிங்) தங்கம் வென்றிருந்தார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *