Share on Social Media


கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரகராக பணியாற்றி வந்தவர் ஜெயச்சந்திரன். இவர் பணியில் இருந்தபோது, சில நாள்களுக்கு முன்பு இரவு வால்பாறை சிறுகுன்ற எஸ்டேட் அரசு விருந்தினர் மாளிகை முன்பு இளைஞர்கள் சிலர் வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

வால்பாறை

Also Read: புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகள் – நீதித்துறை கையாண்டது எப்படி?

அப்போது ரோந்துப் பணியில் இருந்த ஜெயச்சந்திரன், “இது யானை வரும் பாதை. உள்ளே போங்கள்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஜெயச்சந்திரனிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்களில் ஒருவர் பெயர் நாராயணன். இவர் தந்தை டி.ராஜா சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். இதனிடையே, நாராயணன் தான் நீதிபதியின் மகன் என்று கூறி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

p94f Tamil News Spot
வால்பாறை

வாக்குவாதம் முற்றிய நிலையில், நாராயணன் உள்ளிட்ட இளைஞர்களை அங்கிருந்து காலி செய்யுமாறு ஜெயச்சந்திரன் கூறியிருக்கிறார். இதையடுத்து அந்த இளைஞர்கள் மற்றொரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் சென்னை வரை வெடித்துள்ளது.

இதையடுத்து,வால்பாறை நீதிமன்ற தலைமை எழுத்தர் மனோகரன் ஜெயச்சந்திரன் மீது வால்பாறை காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் தகாத வார்தைகளில் பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜெயச்சந்திரனை கைது செய்துள்ளனர். ஜெயச்சந்திரன் கைது விவகாரம் வனத்துறையில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

IMG 20210923 WA0058 Tamil News Spot
ஜெயச்சந்திரன் கைது

“நீதித்துறை அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. நீதிபதி மகன் என்று மிரட்டல் விடுத்ததோடு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வனச்சரகரை கைது செய்வதா?” என்று அட்டக்கட்டி பகுதியில் வனத்துறையினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

மேலும் வனச்சரகர் கைதை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை வனத்துறையினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “வனச்சரகர் அவர்களிடம் சற்று கடுமையாக நடந்து கொண்டுள்ளார். வால்பாறை குறித்து எந்த விபரமும் தெரியாதவர்களை நள்ளிரவு வெளியேற்றியுள்ளார்.

IMG 20210923 WA0040 Tamil News Spot
வனத்துறை போராட்டம்

வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் அவர்கள் நள்ளிரவு எங்கே செல்வார்கள்?. இந்த தர்ம சங்கடமான சூழ்நிலைதான் பிரச்னையை பெரிதாக்கிவிட்டது.” என்று கூறியுள்ளனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *