Share on Social Media


புதுடில்லி : சமூக வலைதளங்களில் நீதிபதிகளை விமர்சித்து கருத்துக்கள் பதிவிடுவது அதிகரித்துள்ளதற்கு, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கவலை தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்த சட்டசேவைகள் தின விழாவில், அவர் பேசியதாவது: நீதிபதிகள் என்ன செய்கின்றனர் என்பது நமக்கு தெரியும், ஆனால், அவர்களின் வாழ்க்கை பற்றி பலருக்கும் தெரிவதில்லை. அவர்கள் எவ்வளவு கடுமையாக பணியாற்றுகின்றனர் என்பதை, நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொது வாழ்வில் இருக்கும் நாங்கள், எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம். ஆனால், நீதிபதிகளால் அப்படி வாழ முடியாது. நீதிபதிகளை விமர்சித்து, சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடுவது, சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இது நல்லதல்ல. நாட்டின் நீதித்துறையை நாமே அவமதிக்க கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *