Share on Social Media

ஜெர்மனியின் முனிக் நகரில் 1972ல் 20வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. முதல் 10 நாட்கள் போட்டிகள் சுமுகமாக நடந்தன. 11வது நாள் அதிகாலை (செப்.5) பாலஸ்தீன பயங்கரவாதிகள் ஒலிம்பிக் கிராமத்தில் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தி 2 இஸ்ரேல் வீரர்களை கொன்று, 9 வீரர்களை பிணையக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இஸ்ரேல் சிறையில் உள்ள 234 பேரை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். மீட்பு போராட்டத்தில் 5 பயங்கரவாதிகள், ஒரு போலீஸ், மற்றும் 9 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இறுதி சடங்கிற்காக நிறுத்தப்பட்ட போட்டிகள் 36 மணி நேரத்திற்கு பின் மீண்டும் நடத்தப்பட்டன. பதக்கப்பட்டியலில் ரஷ்யா முதலிடமும், போட்டியை நடத்திய மேற்கு ஜெர்மனி 4வது இடமும் பெற்றன.

அமெரிக்க நீச்சல் வீரரான மார்க் ஸ்பிட்ஸ் உலக சாதனையுடன் ஏழு தங்கப்பதக்கங்களை அள்ளினார். 100, 200 மீ., ‘பட்டர்பிளை’, ‘பிரீஸ்டைல்’ பிரிவில் தங்கம் வென்ற அன்று மாலையே 4*100 மீ., ‘பிரீஸ்டைல்’ பிரிவில் தங்கத்தை தட்டிச் சென்றார். மறுநாள், 4*200 மீ., ‘பிரீஸ்டைல்’, 4*100 மீ., ‘மெட்லே’ பிரிவுகளில் முதலிடம் பிடித்த ஸ்பிட்ஸ், ஏழு சாதனைகளை தகர்த்து எறிந்தார். இவரது சாதனையை சக நாட்டு நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் பீஜிங் ஒலிம்பிக்கில் (2008) 8 தங்கம் வென்று முறியடித்தார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *