Share on Social Media


மத்திய அரசு என்பதற்கு பதிலாக, ஒன்றிய அரசு என்று அழைப்பது குறித்து தவறான கருத்து, சிலரால் பரப்பப்படுவதால், இனிமேல் நம் சொல்லாக்கத்தில், இந்திய ஒன்றிய அரசு என்றே இருக்கும். அதுபோல தமிழ்நாடு என்றே பயன்படுத்தப்படும்.
– திராவிடர் கழக தலைவர் வீரமணி

‘நீங்கள் அப்படி கூறுவதால், மத்திய அரசுக்கும், தமிழகத்திற்கும் எந்த பாதிப்பும், மாற்றமும் வந்து விடப் போவதில்லை…’ என, கூறத் துாண்டும் வகையில், திராவிடர் கழக தலைவர் வீரமணி அறிக்கை.

‘மேட்ரிமோனியல்’ விளம்பரம் ஒன்றை பார்த்தேன். அதில் மணமகனை தேடும் பெண், ‘கோவிஷீல்ட்’ முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போட்டுள்ளதாக, தன் விபரங்களில் தெரிவித்து உள்ளார். எதிர்காலத்தில் இப்படித் தான் நம் வாழ்க்கை முறை இருக்கும்.
– திருவனந்தபுரம் காங்., – எம்.பி., சசி தரூர்

‘அந்த அளவுக்கு தடுப்பூசிக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. ஆனால், உங்கள் தலைவர், விதண்டாவாதம் பேசி வருகிறார்…’ என, கூறத் தோன்றும் வகையில், திருவனந்தபுரம் காங்., – எம்.பி., சசி தரூர் அறிக்கை.

வரும் 21 முதல், 18 வயது நிரம்பிய அனைவருக்கும் மத்திய அரசு தடுப்பூசி போடப் போகிறது. இந்த திட்டம், ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் தடுப்பூசி போடப்படுவது போன்ற மெகா திட்டமாக இருக்கும்.
– தமிழக பா.ஜ., துணை தலைவர் அண்ணாமலை

‘மக்கள் தொகை அடிப்படையில் நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசிக்கு எதிர்ப்பும் கிடையாது; தட்டுப்பாடும் இல்லை…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., துணை தலைவர் அண்ணாமலை அறிக்கை.

தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் என, பிரதமர் மோடி சொல்கிறார். பிறகு ஏன் தனியார் மருத்துவமனைகளில் பணம் வாங்குகின்றனர் எனக் கேட்டுள்ளார். அவரின் நிலை கண்டு வருத்தம் தான் அடைய வேண்டியுள்ளது.
– கர்நாடக பா.ஜ., — எம்.பி., தேஜஸ்வி சூர்யா

‘விபரம் புரியாமல், துடுக்குத்தனமாக பேசுவதால் தானே, அவரை, ‘பப்பு’ என்கின்றனர், வட மாநிலங்களில்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், கர்நாடக பா.ஜ., — எம்.பி., தேஜஸ்வி சூர்யா அறிக்கை.

அரசு வேலைவாய்ப்பில், கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, எம்.ஜி.ஆர்., ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, முந்தைய, இ.பி.எஸ்., ஆட்சி நிறுத்தி வைத்துள்ளது. அதை, தி.மு.க., அரசு செயல்படுத்த வேண்டும்.
– விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார்

‘இது உங்கள் ஆட்சி. நீங்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும். எனவே, கவலைப்படாதீர்கள். கண்டிப்பாக, இரண்டொரு நாட்களில் உத்தரவு வந்து விடும். சரி, அரசுக்கு ஆள் எடுக்கும் நிலையிலா அரசு உள்ளது…’ என, கேட்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார் அறிக்கை.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *