ahmed zayan ABUWC 0a7 A unsplash Tamil News Spot
Share on Social Media

நிராகரிப்பிலிருந்து மீளும் வழிகள் ✌️

ஸ்பிரிங் என்கிற `திருகு சுருள் வில்’லை தயாரிப்பதில் Coiling, Hardening and Polishing என மூன்று செயல்முறைகள் இருப்பது போல நிராகரிப்பை எதிர்கொண்டு மீள்வதையும் மூன்று பகுதிகளில்

– நிராகரிப்பை எதிர்பார்ப்பதும் எதிர்கொள்வதும்,

– பக்கவப்படுதலும் நிராகரிப்பிலிருந்து மீள்வதும்,

– நிராகரிப்பிலிருந்து படிப்பினையும் முன்னேற்றமும் எனப் பிரித்துச் சொல்லியிருக்கிறார்.

நிராகரிப்பை எதிர்கொள்ள உங்களைத் தயார்ப்படுத்திக்கொள்வது அவசியம். வேலை பார்க்குமிடத்தில் நீங்கள் கொடுக்கும் யோசனை நிராகரிக்கப்பட்டால் கொஞ்சம் நிதானித்து யோசியுங்கள். கொடுத்த யோசனையை மாற்றலாமா அல்லது முற்றிலும் புதிய யோசனையைக் கொடுப்பதா, அதற்கு என்ன செய்ய வேண்டும் என சிந்தித்து அதன்படி செயல்படுங்கள். அவர்கள் நிராகரித்தது உங்களது யோசனையைத்தானே தவிர, உங்களையல்ல என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். நிராகரிப்பை எதிர்கொள்ளும்போதெல்லாம் இதை நினைவுகூர மறக்காதீர்கள்.

பலமுறை நிராகரிக்கப்பட்ட எழுத்தாளர்கள்

பிரபல எழுத்தாளர் அமிஷ் திரிபாதி, எழுத்தாளர் ஆவதற்கு முன்பு வங்கியில் உயர் பதவியில் இருந்தவர். இதிகாசத்தின் / புராணத்தின் அடிப்படையில் அவர் எழுதிய முதல் நாவல் `இம்மார்ட்டல்ஸ் ஆஃப் மெலுஹா’ பதிப்பாளர்களால் பலமுறை நிராகரிக்கப்பட்டது. இறுதியில் அவரே அதை அச்சில் கொண்டு வர புத்தகம் பிரபலமானது. அதன்பின், பதிப்பாளர்கள் போட்டிபோட்டுக் கொண்டு அவரது நூலைப் பதிப்பிக்க ஆரம்பிக்க இன்றைக்கு அவர் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் சுமார் 35 லட்சம் பிரதிகள் விற்பனையாகிருக்கின்றன. இந்தியாவில் விற்பனையாகும் முதல் 10 புத்தகங்களில் (best sellers) இவரது ஆறு புத்தகங்கள் இடம் பெற்றிருப்பது உலகளவில் ஒரு சாதனையாகும்!

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *