Share on Social Media


பாகூர் : தென்பெண்ணையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டு நிரம்பி வழிகிறது.

பாகூர் அடுத்துள்ள குருவிநத்தம் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, சித்தேரி அணை கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 2 மீட்டர் உயரமாகும்.கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால், தென்பெண்ணையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், குருவிநத்தம் சித்தேரி அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.நேற்று முன்தினம் மாலை 5 மணி நிலவரப்படி 1.7 மீட்டராக இருந்த தண்ணீரின் அளவு நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 1.9 மீட்டராக உயர்ந்துள்ளது.

நீர் வரத்து அதிகரித்ததால், ஆற்றின் கரை பகுதிகளின் பாதுகாப்பு கருதி, தற்போது அணை கட்டின் நான்கு ஷட்டர்களில், இரண்டு ஷட்டர்கள் மட்டும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.அணையின் வடக்கு பகுதியில் தமிழக எல்லையில் உள்ள வாய்க்கால் துார்வாரப்படாமல் உள்ளதால், அப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது.எனவே, தமிழக வாய்க்காலை போர்க்கால அடிப்படையில் துார்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *