Share on Social Media


இந்த நிலையில், தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில், லட்சக்கணக்கான டன் கருங்கற் பாறையை வெட்டி எடுத்து, குகை குடைந்து, நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான ஆராய்ச்சி மையம் அமைக்கு முயற்சியில், 2010-ம் ஆண்டிலிருந்து ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு, இடுக்கி ஆகிய அணைகளில் விரிசல் ஏற்படும்.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் இந்தத் திட்டத்தை, உள்ளூர் மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். 2018-ம் ஆண்டு, மதுரை பழங்காநத்தத்தில் இருந்து கம்பம் வரை, என் தலைமையில் 13 நாள்கள் நடைப்பயணம் மேற்கொண்டோம். இந்த நடைப்பயணத்தை, தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நியூட்ரினோ

நியூட்ரினோ

காட்டுயிர்களுக்குக் கேடு இல்லை என மாநில அரசிடம் சான்று கோரி வந்துள்ள விண்ணப்பத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது. ஏற்கெனவே வழங்கப்பட்ட வனத்துறை சான்றையும் திரும்பப் பெற வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு விசாரணையில், தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்து சுற்றுச்சூழல் சான்றுக்கு தடை விதிக்கும் தீர்ப்பைப் பெறவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று வலியுறுத்தியுள்ளார்.

நியூட்ரினோ திட்டத்தைக் கடந்த பத்தாண்டுக் காலமாகத் தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்து வருகின்றனர். நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதன் மூலம் அறிவியல் வளர்ச்சி ஏற்படும் என்று கூறி அதை அமல்படுத்த இந்திய அரசு பல வழிகளில் முயற்சி செய்துகொண்டிருந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் அந்தத் திட்டத்துக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *