Share on Social Media


கடந்த, 2016ல் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், தொடர்ந்து பல மோசமான பொருளாதார நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்கு காரணம், பிரதமர் மோடி தான். அவர், பொருளாதார வல்லுனர்களின் கருத்தை ஏற்க மாட்டார்; விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள மாட்டார்.
– காங்., முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம்

‘பத்தாண்டுகளாக காங்., ஆட்சியில், நீங்கள் நிதியமைச்சராக இருந்தபோது நடந்த ஊழல் காரணமாக, நீங்கள் 180 நாள் சிறை வாசம் அனுபவித்ததை, மக்கள் இன்னும் மறக்கவில்லை…’ என்பதை நினைவூட்டும் வகையில், காங்., முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் அறிக்கை:.

தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் அல்ல; தை முதல் நாளே. தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்பட்டு, சனாதனம் நிலைப்படுத்தப்பட்டதற்கு இது ஒரு சான்று. பாவேந்தர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் இதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
– விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

‘எதை எடுத்தாலும் வில்லங்கம் பேசுபவர்களை திருத்த முடியாது; அவர்களை, அவர்கள் பாணியில் விட்டு விட வேண்டியது தான்…’ என, விரக்தியுடன் சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.

தேர்தல் ஓட்டு அரசியலுக்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நீங்கள் போட்ட தமிழர் பண்பாடு, தமிழ் கலாசாரத்தை பாதுகாப்போம் என்ற நாடகம், தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லாததில் இருந்தே முடிந்துவிட்டது.
– நடிகை காயத்ரி ரகுராம்

‘அவரின் தந்தை கருணாநிதி தான், ‘தை முதல் தேதி தான், தமிழ் புத்தாண்டு’ என பின்பற்ற அறிவிப்பு வெளியிட்டவர்; அதை, மகன் ஸ்டாலின் மீறுவாரா… ‘டிராமா’ அரசியல் ஓய்ந்தால் தான், தமிழக மக்கள் நிம்மதி பெறுவர்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., கலாசார பிரிவு தலைவர், நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கை.

மங்களகரமான ஆடிப்பெருக்கு, தைப்பூசம், சித்திரை முதல் தேதி ஆகிய நாட்களில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரப்பதிவு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும், அந்த நாட்களில் கட்டணத்தை உயர்த்தி, அப்பாவிகள் வயிற்றில் அடித்துள்ளது. இதை நிறுத்தவில்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.
– தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்

‘இந்த பகல் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை.

அரசு அதிகாரிகள், காவல் துறையினர் போன்றோர், மக்கள் சேவகர்கள் தான். மக்களுக்கு சேவை செய்யத் தான், தங்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை மறந்து, அப்பாவி மக்கள் மீதே தாக்குதல் நடத்தும் கொடுமை நடக்கிறது. சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள் நடந்த பிறகும், போலீஸ் அதிகாரிகள் திருந்தவில்லை என்பதையே இது காட்டுகிறது.
– திராவிடர் கழகத் தலைவர் வீரமணி

‘காவல் துறையில் இருப்பவர்களில், 75 சதவீதம் பேருக்கு சட்டம் தெரியாது; 20 சதவீதம் பேருக்கு, சட்டமும் தெரியாது, மனிதாபிமானமும் கிடையாது; 5 சதவீதம் பேர் தான் நியாயமானவர்கள்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *