Share on Social Media


பெங்களூரு : கர்நாடகா மாநில பட்ஜெட், 2021 – 22க்கு, இறுதி வடிவம் கொடுப்பது குறித்து, நிதித்துறை உயர் அதிகாரிகளுடன், முதல்வர் எடியூரப்பா, இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

நிதித்துறை வகிக்கும் முதல்வர் எடியூரப்பா, கர்நாடக மாநில பட்ஜெட்டை வரும், 8ல், தாக்கல் செய்கிறார். இதற்கான, இறுதி கட்ட வடிவம் கொடுக்கப்படுகிறது.நிதித்துறை உயர் அதிகாரிகளுடன், இன்று முதல்வர் எடியூரப்பா ஆலோசிக்கிறார். அப்போது, பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய திட்டங்கள் குறித்து, இறுதி செய்யப்படுகின்றன.இதன் பின், நாளை மறுநாள் நடக்கும், கர்நாடகா அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். மறுநாள், 4ல், மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது.இது குறித்து, முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ”மாநில மக்களின் கஷ்டங்கள் நீங்கி, சிறப்பாக வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்.

அந்த வகையில், இம்முறை பட்ஜெட், தாக்கல் செய்வது என் பொறுப்பாகும்,” என்றார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *